ஓரொருகால் எம்பெருமான் விளக்கம் புதிது!

"ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்'  எனத் தொடங்கும் மாணிக்கவாசகரின் "திருவெம்பாவை' பாடலின் (15)  முதல் அடிக்கு ஒரு புதிய விளக்கம் பின்வருமாறு கிடைத்திருக்கிறது.
ஓரொருகால் எம்பெருமான் விளக்கம் புதிது!

"ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்'  எனத் தொடங்கும் மாணிக்கவாசகரின் "திருவெம்பாவை' பாடலின் (15)  முதல் அடிக்கு ஒரு புதிய விளக்கம் பின்வருமாறு கிடைத்திருக்கிறது.

தன் தோழியின் சிவபக்தியை வியந்து பாராட்டி அவளுடைய தோழிப் பெண்கள் சொல்லும் வகையில் அமைந்த பாடல் இது. "நாங்களெல்லாம் ஏதோ ஒருசில சமயங்களில் மட்டுமே சிவபெருமானை "எம்பெருமான்' என்று போற்றுவோம். இவளோ நம்பெருமானது திருப்பெயரை வாய் ஓயாமல் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். 

என்னே இவளது சிவபக்தி! அந்த இடையறாப் பேரன்பு  எங்களுக்கு இல்லையே!' என்று குறிப்பிடும் பொருளில் அமைந்த பாடல் இது.

இப்பாடலில் வரும், "என்றென்றே நம் பெருமான்' என்பதில்  வரும்  "என்றென்றே' என்னும் நிலைமொழியும், "நம்பெருமான்' என்னும் வருமொழியும் சந்திக்கும் சந்தி, பொருளுணர்த்தும் வகையில் பிரிக்கப்படாமலேயே இப்பாடல் திருவாசகப் பதிப்புகளில் காணப்படுகிறது. எனவே, இப்பாடல் மேற்கண்ட பொருளைப் புலப்படுத்தும் வகையில் பின்வருமாறு சீர் பிரிக்கப்பட வேண்டும்.

"ஓரொருகால் எம்பெருமான்
என்றென்றேம் நம்பெருமான் 
சீரொருகால் வாய் ஓவாள்' 

"நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்' என்பதற்கு நம்பெருமானது சீராகிய திருப்புகழை இவள் ஒருகாலும் வாய் ஓவாமல் (இடையறாமல்) சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று பொருளாகும்! "ஒருகால்' என்னும் சொற்றொடரில் "ஒருகாலும்' என்னும் உம்மை தொக்கது. இத்தகைய புதிய விளக்கத்தை பாலகவி மு.கோ.ராமன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் "தமிழ்த் தாத்தா' உ.வே. சாமிநாதையரின் மாணாக்கராகிய வே. முத்துசாமி ஐயரின் புதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com