கவிதை நூல் போட்டி
By DIN | Published On : 30th January 2022 04:30 PM | Last Updated : 30th January 2022 04:30 PM | அ+அ அ- |

பொதிகைத் தமிழ்ச் சங்கம் ழகரம் வெளியீடு இணைந்து நடத்தும் கவிதை நூல் போட்டி.
2021ஆம் ஆண்டில் தமிழில் வெளியான கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. நூல்களின் 2 படிகளை, நூலாசிரியரின் பெயர், ஊர், பணி, கைப்பேசி எண் ஆகியவற்றுடன் "இந்நூல்தான் எனது முதல் நூல், இதற்கு முன்னர் யாதொரு நூலையும் வெளியிட்டதில்லை' என்ற சுயச் சான்றையும் இணைத்து 15.2.2022க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
மகளிருக்கான சிறப்புப் பரிசாக முதல் பரிசு பெறும் நூலாசிரியருக்கு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5,000 ரொக்கமாக சென்னை "ழகரம்' வெளியீடு சார்பில் வழங்கப்படும். அத்துடன் "ழகரம் இலக்கிய விருதாக தலைவர் முனைவர் பால.இரமணி' என்ற விருதும் வழங்கப்படும்.
பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில், தேர்வாகும் முதலிரண்டு நூலாசிரியர்களுக்கு தலா ரூ.,5000 வீதம் மொத்தம் ரூபாய் 10,000 ரொக்கமும், விருதும் வழங்கப்படும். திருநெல்வேலியில் நடைபெறும் பொதிகைத் தமிழ்ச் சங்க விழாவில் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்படும். வெற்றி பெற்ற நூலாசிரியர்கள் விழாவில் நேரில் கலந்து கொண்டுதான் பரிசுகளைப் பெற வேண்டும்.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் பேரா,
த.பெ. எண்:103, பாளையங்கோட்டை,
திருநெல்வேலி627002.
8903926173