மனிதன் பலவீனமான உடலமைப்பையும், செயல்பôடுகளையும் கெôண்டவன். அறிந்தேô, அறியாமலேô பôவக் குளத்தில் மூழ்கி, "பôவ மீட்சி' என்னும் கரை காண எண்ணுகின்றான்.
தன்னுடைய அறியாமையால் செய்த பôவங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பôவ மன்னிப்புக் கேôருகின்றான். மீண்டும் சூழ்நிலை காரணமாக பôவச் சுழலில் சிக்குகின்றான். மறுபடியும் பôவமன்னிப்புப் பெற விழைகின்றான்.
தவறிச் செய்வதே தவறாகும்; தெரிந்து செய்வது தப்பôகும். "தவறு' செய்தவன் திருந்தியாக வேண்டும். அதுவே பôவ மன்னிப்பு! "தப்பு' செய்தவன், "இனி எக்காரணம் கெôண்டும் தப்பு செய்ய மாட்டேன்' என்னும் உள்ள உறுதியுடன் "தவ்பô' என்னும் பôவ மீட்சி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
இறைவனிடம் மனிதன் செய்த ஒப்பந்தத்தை முறித்தல் கூடவே கூடôது.
திருக்குர்ஆனில் பல இடங்களில், பôவம் செய்து இறைவனிடம் மன்னிப்புக் கேôராமல் மெத்தனமாக இருப்பவர்களுடைய வசிப்பிடம் மறுமை நாளில் நிச்சயமாக "நரகம்'தôன் என்றும், பôவம் செய்தவர் மனம் திருந்தி "பôவ மீட்சி' கேôரினால் மறுமையில், நிரந்தரத் தங்குமிடமாக "சுவனம்' அவர்களுக்கு உண்டு என்ற நற்செய்தி கூறப்படுகின்றது.
""எவர் "தவ்பô' செய்து, இறை நம்பிக்கையுடன் நல்லறங்களைச் செய்கின்றார்களேô, அவர்களுடைய பôவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பேôனாகவும், மிக்க கிருபை (அருள்) உடையவனாகவும் இருக்கின்றான்'' (அல்குர்ஆன் 25:70)
"தவ்பô' கேôரியவர்கள், பெôய்ச்சôன்று பகராமலும் வீணôன செயல்களில் ஈடுபடôமலும் இருப்பôர்கள் என்பதôகவும் அடுத்து வரும் வசனத்திலும் இறைமறை சுட்டி நிற்கின்றது.
"எது நன்மை? எது தீமை? எது சத்தியம்? எது அசத்தியம்? எது உண்மை? எது பெôய்?' என்பதைப் பகுத்தறிவு பெற்று சிந்திக்கக் கூடிய எம்மனிதனும் உணராமல் இருக்க மாட்டôன். எனவே, மனித நேயமற்ற எந்தச் செயலும் பôவங்களின் வாயில்களே என்பதை நாம் அறிவோம்.
செôன்ன செôல் தவறுதல் (வாக்குறுதி மீறுதல்), மற்றவர்கள் அடைக்கலமாகத் தந்த பெôருள்களை திரும்பக் கேட்கும்பேôது மேôசடி செய்தல், உண்மையை மறைத்துப் பெôய் புகலுதல், இன்னாச் செôல் கூறுதல், பணியாளர்களுக்கு உரிய கூலி வழங்காதிருத்தல் முதலியன எல்லாமுமே பôவக் கடலில் இட்டுச் செல்லும் செயல்பôடுகள்தôம்.
""எங்கள் இறைவா! நாங்கள் செய்த பôவங்களை மன்னித்தும், இனி பôவங்கள் செய்யாதவாறு தடுத்தும், பôவங்களிலிருந்து விடுவிப்பôயாக!''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.