யார் யாருக்கு வழங்கலாம்?

எல்லாருக்கும் தர்மம் கொடுக்க முடியாது. தர்மம் பெற தகுதியுள்ள இல்லாதோருக்கே தர்மம் கொடுக்க வேண்டும். அதையே "பாத்திரமறிந்து பிச்சையிடு' என்று எச்சரிக்கிறது தமிழ் முதுமொழி. ஹஜ்ரத் அம்ருபின் அல்ஜீமஹ் என்ற
Updated on
1 min read

எல்லாருக்கும் தர்மம் கொடுக்க முடியாது. தர்மம் பெற தகுதியுள்ள இல்லாதோருக்கே தர்மம் கொடுக்க வேண்டும். அதையே "பாத்திரமறிந்து பிச்சையிடு' என்று எச்சரிக்கிறது தமிழ் முதுமொழி.

ஹஜ்ரத் அம்ருபின் அல்ஜீமஹ் என்ற வயது முதிர்ந்த நாயகத் தோழர் செல்வ சீமான். அவரின் செல்வத்தில் எதை, யார் யாருக்கு வழங்கலாம் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்குப் பதில் சொல்ல இறைவசனம் 2-215 இறங்கியது.

""பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் பிரயாணிகளுக்கும் உங்கள் பொருளிலிருந்து செலவிடுவது ஏற்புடையதாகும். நீங்கள் செய்யும் நன்மைகளை நன்கறிபவன் அல்லாஹ்''.

பெற்றோரைப் பேணுவது பெருங்கடமை. செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்று உறவினர்களுக்கு உதவ வேண்டும். அனாதைகளை ஆதரித்து அவர்களுக்கு ஆவன செய்தால் பாவங்கள் நீங்கும்.

ஏழைகளுக்கு என்றும் எப்பொழுதும் தப்பாது தர்மம் கொடுக்க வேண்டும். இல்லாமையைச் சொல்லாமலும், வறுமையை வெளிப்படுத்தாமலும், பிறரிடம் ஈயாது, பொறுத்தார் பூமியாள்வர் என்று பொறுமையுடன் இருப்போரைத் தேடிச் சென்று தேவையான பொருளைக் கொடுக்க வேண்டும்.

எவர் ஏழைகள் என்று புகாரி, முஸ்லிம், ஹதீது நூல்கள் வரையறுக்கின்றன.

""தன் தேவையைத் தீர்க்க சக்தியற்றிருந்தும் பிறரிடம் யாசிக்காது ஏழ்மையை வெளிக்காட்டாதிருப்பவனே உண்மையான ஏழை''.

பயணிகள் ஊருக்குப் புதியவர்களாயிருப்பர்; யாருக்கும் தெரியாது அவர்கள் நிலைமை. அவர்கள் புதிய இடத்தில் புரியாது தவிக்கும் பொழுது தெரிந்ததைத் தெரிவித்து தேவையைத் தீர்ப்பது காலத்தினாற் செய்த ஞாலத்தின் பெரிய பேருதவி. பெருந்தர்மம்.

இத்தகு தர்மங்களை இத்தரணியில் இறையச்சத்தோடு செய்து மறுமையில் பெறுவோம் பெரும் பலனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com