நெல்லை நகரம், நெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் உள்ளது புட்டார்த்தி அம்மன் கோயில். நெல்லை டவுனில் இருந்து பேருந்துகள் குளக்கரையை நோக்கித் திரும்பும் ஒருவழிப்பாதையில், நெல்லையப்பர் கோயிலின் வட மேல்புறத்தில் அமைந்திருக்கிறது அம்மன் கோயில். இந்த இடத்தை பிட்டாபுரம் என்று அழைக்கிறார்கள். அம்மனுக்கு அதனால் பிட்டாபுரத்து நாயகி, பிட்டாபுரத்தம்மன் என்று பெயர் ஏற்பட்டது. இந்த அம்மைக்கு பிட்டாபுரத்தி, வடவாயிற்செல்வி, நெல்லைமாகாளி, செண்பகச்செல்வி என்றெல்லாம் பெயர்கள் வழங்கப்பட்டாலும், பேச்சு வழக்கில் புட்டார்த்தி அம்மன் என்றே அழைக்கிறார்கள். அம்மைக்கு பிட்டு நைவேத்தியம் மிகவும் புகழ்பெற்றது.