வால்மீகி முனிவர் ஒருமுறை லவ-குசனுடன் யாத்திரை செய்தார். ஒரு சித்ரா பெüர்ணமியன்று, இங்கே அவர்கள் பர்ணசாலை அமைத்துத் தங்கினர். அன்று நித்தியக் கடன்களைச் செய்ய, லவனும் குசனும் நதியில் மூழ்கினர். நதியின் நடுவில், ஆதிசேஷன் குடைபிடிக்க சங்கு-சக்ரதாரியாகக் காட்சி தரும் தேவாதிராஜரை முனிவர் ஒருவர் பூஜிப்பதைக் கண்டு, ஆச்சரியம் அடைந்து வால்மீகியிடம் தெரிவித்தனர். அவர் ஞானக்கண்ணால், அருகில் ஸ்ரீவரதராஜப் பெருமாளை வணங்கி வரும் குசநாப முனிவரைக் கண்டார். பின்னர், குசநாபர் ஆஸ்ரமத்துக்கு மூவரும் சென்றனர். அங்கே பெருமாளைக் கண்டு, ஸ்ரீராமாயண ஸ்லோகங்களால் போற்றினர்.