இரக்கம் காட்டுகிறவன்!

ஸுஹைப் இப்னு ஸினான் ரூமி என்ற நபித்தோழருக்கு அபூயஹ்யா என்ற பெயரும் உண்டு. மக்காவில் செல்வமிக்கவர். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற பின் அவரும் ஒரு நாள் மதீனா செல்லப் புறப்பட்டார். அவர் மதீனா செல
Updated on
1 min read

ஸுஹைப் இப்னு ஸினான் ரூமி என்ற நபித்தோழருக்கு அபூயஹ்யா என்ற பெயரும் உண்டு. மக்காவில் செல்வமிக்கவர். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்ற பின் அவரும் ஒரு நாள் மதீனா செல்லப் புறப்பட்டார். அவர் மதீனா செல்வதறிந்த குறைஷி காபிர்கள் அவரைப் பிடித்து இழுத்து வந்து தண்டிக்க ஓடினர். ஸýஹைபைச் சுற்றி வளைத்தனர். வாகனத்திலிருந்து இறங்கிய ஸýஹைப்(ரலி) அம்புக் கூட்டிலிருந்து அம்புகள் அனைத்தையும் வெளியில் எடுத்து, ""என் அருகில் நெருங்கினால் அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைக் குறி வைத்து அம்பெய்தி கொன்றுவிடுவேன். அம்புகள் தீர்ந்ததும் எஞ்சியவரை என் வாள் வஞ்சம் தீர்க்கும்'' என்றார்.

சுற்றி வளைத்த சூழ்ச்சிக்காரர்களான எதிரிகள், ""உங்கள் செல்வத்தை மக்காவில் எங்கு ஒளித்து வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் ஓடி விடுகிறோம்''என்றனர்.

அல்லாஹ்வின் அருள் தேடி அவன் தூதர் இருக்கும் மதினாவிற்குச் செல்லும் ஸýஹைப் (ரலி) அவர்கள் பொருள் இருக்கும் இடத்தைப் புலப்படுத்தியதும் பிறர் பொருள் கவரும் கொள்ளையர்களான புல்லர் கூட்டம் புறமுதுகிட்டு மக்காவிற்குத் திரும்பி ஓடியது.

ஸýஹைப் (ரலி) அவர்கள் மதீனா சென்று சேருவதற்கு முன்னால், ""அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி தம்மையே விற்றவரும் மனிதர்களில் உண்டு. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக்க இரக்கம் காட்டுகிறவன்'' (2-207) என்ற திருக்குர்ஆன் வசனம் இறங்கியது.

ஸþஹைப் (ரலி) அவர்கள் மதீனா வந்ததும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்,""அபூயஹ்யாவே! உங்களின் வியாபாரம் லாபம் அளித்துவிட்டது'' என்று கூறி மேற்குறிப்பிட்ட வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

இவ்வாறு நபித்தோழர்கள் பலர் இஸ்லாத்திற்காக எதையும் இழப்போம், எதுவரினும் ஈமானை இழந்திடோம் என்று உறுதியாக வாழ்ந்தனர்.

இன்னும் இறையச்சத்தோடு, இஸ்லாமிய கொள்கைகளை உலக இன்பத்திற்காகவும் உலக சுகத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும் விட்டுக் கொடுக்காது, கொள்கைப் பிடிப்போடு வாழ்வோர் இம்மை மறுமை வாழ்வில் அல்லாஹ்வின் அருளைப் பெறுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com