தேங்காய் உடைப்பது எதற்காக?

திருமணங்கள் போன்ற சுப காரியங்களிலும் கோயில்களிலும் பூஜைகளிலும் சமர்ப்பிப்பதில் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குவது தேங்காய். புது வீடு, வண்டி போன்றவை வாங்கும்போதும் நாம் உடைப்பது தேங்காயைத்தான். ஹோமங்கள்
தேங்காய் உடைப்பது எதற்காக?
Published on
Updated on
1 min read

திருமணங்கள் போன்ற சுப காரியங்களிலும் கோயில்களிலும் பூஜைகளிலும் சமர்ப்பிப்பதில் மிகப் பிரபலமான ஒன்றாக விளங்குவது தேங்காய். புது வீடு, வண்டி போன்றவை வாங்கும்போதும் நாம் உடைப்பது தேங்காயைத்தான். ஹோமங்கள் செய்யும்போது, ஹோமத் திரவியமாக பூர்ணாகுதியில் சேர்ப்பதும் இதைத்தான். தெருக்கள்தோறும் வீற்றிருக்கும் விநாயகருக்கு நாம் முதலில் அர்ப்பணம் செய்வதும் தேங்காய்தான். அதுவே பின்னர் பிரசாதம் என்று எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

தேங்காய் மூன்று கண்களைக் கொண்டதால், முக்கண் முதல்வனான சிவபெருமானின் நினைவைத் தருகிறது. அதன் மூலம், நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

மரத்திலிருந்து பறிக்கப்படும் தேங்காயை உரித்து, கொஞ்சம் மேல்புறத்தில் நார் வைத்து(குடுமியுடன்), உள்ளிருக்கும் ஓட்டுடன் வைத்தால் அது பார்ப்பதற்கு ஒரு மனிதனின் தலையைப் போன்றே தோன்றும். அதை இறைவனின் முன் உடைப்பது என்பது, நம் தலைக்கனத்தை சிதறச் செய்வதற்கு ஒப்பாகும். தேங்காய் உடைப்பதன் மூலம், நம் கர்வம் இறைவனின் முன் சிதறித் தெறிக்கிறது. அது சிதறித் தெறித்தால், வெளியே தெளிக்கும் தேங்காய் நீர், நம்முள் இருக்கும் மனப்பாங்கை (வாசனைகளை) வெளிப்படுத்துகிறது. இவ்வாறு, நம் கர்வம் தொலைத்து, தூய மனத்தை இறைவனுக்கு சமர்ப்பிப்பதைத்தான் தேங்காய் உடைப்பது வெளிப்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com