துர்க்கையை வழிபடுவது ஏன்?

உயர்ந்த பண்புகள் பெற வேண்டுமானால், உள்ளத்தில் தீய எண்ணங்கள் மாய வேண்டும். இதற்கு அடையாளமாக இருப்பவளே துர்க்கா தேவி. துர்க்கா என்றால் தீய எண்ணம் அழிப்பவள் என்று பொருள். மகிஷாசுரன் என்ற காட்டெருமை உருவி
துர்க்கையை வழிபடுவது ஏன்?
Published on
Updated on
1 min read

உயர்ந்த பண்புகள் பெற வேண்டுமானால், உள்ளத்தில் தீய எண்ணங்கள் மாய வேண்டும். இதற்கு அடையாளமாக இருப்பவளே துர்க்கா தேவி. துர்க்கா என்றால் தீய எண்ணம் அழிப்பவள் என்று பொருள். மகிஷாசுரன் என்ற காட்டெருமை உருவில் வந்த அசுரனை அழித்ததால் மகிஷாசுரமர்த்தினி என்று பெயர். தமோ குணத்தைக் காட்டுவது எருமை. அதாவது சோம்பல், மந்தநிலை, இருட்டு, அறியாமை போன்றவற்றைக் குறிக்கிறது. நம்மிடமுள்ள இத்தகைய குணங்களை அழித்து நமக்குள் மறைந்து கிடக்கும் தெய்வீக ஆற்றலை நாம் பெற துர்க்கையை வழிபடுகிறோம்.

லட்சுமி பூஜை ஏன்?

லட்சுமி என்றவுடன் செல்வம், பணம்தான் நம் மனத்தில் தோன்றுகிறது. நமக்கு செல்வம் அதிகம் இருந்தாலும், சுயகட்டுப்பாடு, ஒழுக்கம், அன்பு, இரக்கம், மனசாட்சிப்படி நடத்தல் போன்றவை இல்லையென்றால் செல்வம் நம்மை விட்டுப் பறந்தோடும். நம் வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகளே உண்மையான செல்வம். உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி முகப் பொலிவு தருவது அதுவே. அதற்காகவே 3 இரவுகள் லட்சுமி பூஜை செய்கிறோம். பழமையான உபநிஷத்தில் முனிவர்களின் பிரார்த்தனை இது: ஹே பகவானே அனைத்து நற்பண்புகளையும் அளித்து, தயை கூர்ந்து எங்களுக்கு செல்வத்தையும் அளிப்பாய்... என்பது. நற்பண்புகள் பெற்றவன் பெற்ற செல்வம் எல்லோருக்கும் பயன்படுவது. அதுவே லட்சுமி கடாட்சம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com