திருவருட்பாவின் சிறப்பு!

வள்ளலார், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, சம காலத்தில் வாழ்ந்த சான்றோர்கள். மகாவித்துவான் மயிலாடுதுறையில் தங்கியிருந்த போது காவிரியில் அன்பர்களுடன் நீராடச் சென்றார். காவிரியில் துலா ஸ்நானக் கட்
திருவருட்பாவின் சிறப்பு!
Updated on
1 min read

வள்ளலார், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, சம காலத்தில் வாழ்ந்த சான்றோர்கள். மகாவித்துவான் மயிலாடுதுறையில் தங்கியிருந்த போது காவிரியில் அன்பர்களுடன் நீராடச் சென்றார்.

காவிரியில் துலா ஸ்நானக் கட்டத்தில் நீராடுவதற்கு இறங்கினார் பிள்ளை. தண்ணீரில் நின்றபடியே தற்செயலாகப் பார்த்தார். கரை மேலே ஒரு கையடக்கப் புத்தகத்துடன் அன்பர் ஒருவர் உலாவிக் கொண்டிருந்தார். அவர் வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்; காரணப்பட்டு சமரச பஜனை கந்தசாமி என்பது அவர் பெயர்.

"புத்தகம்' என்றாலே தமிழ் வித்தகர்களுக்கு ஆர்வம் உண்டாகுமல்லவா? எனவே பிள்ளை, கரை மேல் உலவிய அன்பரை நோக்கி "ஐயா அது என்ன புத்தகம்; கொஞ்சம் பார்க்கலாமா?'' என்று கேட்டார்.

உடனே அந்த அன்பர் ""இது திரு அருட்பா. பாருங்கள்'' என்று அன்புடன் கூறி பிள்ளை அவர்கள் கையில் கொடுத்தார். தண்ணீரில் நின்றபடியே அந்த அருட்பா ஏட்டைப் பிரித்தார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. அவர் பிரித்த பக்கத்தில் ""கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து'' என்று தொடங்கி, ""மனக் கருங்கற் பாறையும் உட்கசிந்து உருக்கும் வடிவத்தோயே'' என்று முடியும் மகாதேவ மாலை காப்புச் செய்யுள் பளிச்சிட்டது.

சிவ பக்தியும் செந்தமிழுமே வடிவான பிள்ளை அந்தச் செய்யுளைப் படித்தார். ஆஹா... என்று சொல்லி அப்படியே காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினார். அருகிலிருந்த பக்தர்கள், ""பாட்டுக்குப் பொருள் சொல்லுங்கள்'' என்றனர்.

மகாவித்வான் அவர்களைப் பார்த்து ""இந்த அருட்பா நூலை தலைமிசை தாங்கி ஆனந்தக் கண்ணீர் பொழிவதுதான் பாட்டுக்குப் பொருள்'' என்று கண்ணீர் ததும்பக் கூறினார். ஆம்.. மகாவித்வான் கூறியது உண்மை.

அங்க லட்சணத்துக்குப் பொருள் கூறலாம். ஆத்ம லட்சணத்துக்குப் பொருள் சொல்ல இயலுமா? முடியாது. திருஅருட்பா பாடல்கள் அப்படிப்பட்ட சிறப்புடையன. மகாவித்வான், வள்ளலாரிடம் பெரும் பக்தி கொண்டவர். வடலூரில் வள்ளலாரை ஒருமுறை தரிசித்து உரையாடிய சிவஞானி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com