

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, விழுதியூரில் உள்ளது இந்த ஆலயம். இங்குள்ள மீனாட்சியம்மன் சமேத சொக்கலிங்கர் கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்
ஆய்வாளர்கள்.
சுவாமி, அம்மன் தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி, நந்தி, சண்டிகேஸ்வரர், முருகன், ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் போன்ற தெய்வ மூர்த்தங்களின் சிலைகள் சீரிய வடிவமைப்புடன் காணப்படுகின்றன. அனைத்து மூர்த்தங்களும் சந்நிதிகள் இல்லாமல் இருக்கின்றன. ஆலயம் முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. இங்குள்ள லிங்கத் திருமேனியில் ஒவ்வொரு மாதமும் பாம்பு சட்டை உரிக்கும் அதிசயம் நடந்து வருகிறது. கோயில் சிதைந்த நிலையிலும், சாந்நித்யம் குறையாமல் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சந்தோஷத்தை அருள்கிறார் சொக்கலிங்கப் பெருமான். தற்போது மெய்யன்பர்கள் சிலர் இந்த ஆலயத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 98400 53289.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.