

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள்(விவிலியம்) உலகில் உள்ள எல்லா மொழிகளிலுமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மக்கள் புத்தகமான அந்நூல் கடவுள் -மக்களிடையே உள்ள உறவை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. அந்நூலிலிருந்து சில வாசகங்கள்.
•அன்பானது பிறருக்கு பொல்லாங்கு செய்யாது. (ரோமர் 13:10).
•உங்களுக்கு இரக்கமும்-சமாதானமும்-அன்பும் பெருகக் கடவது (யூதா 1:2).
•நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்தேயு 5:6)
•இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
(மத்தேயு 5:7).
•இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்(மத்தேயு 5:8).
•அன்பு தேவனால் உண்டாகியிருக்கிறது (1 யோவான் 4:7).
•அன்பிலே பயமில்லை: பூரண அன்பு
பயத்தைப் புறந்தள்ளும் (1 யோவான் 4;18).
•உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் (2 கொரிந்தியர் 9:7).
•தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்கள் அந்த ஆலயம் (1 கொரிந்தியர் 3:17).
•நீங்கள் மனுஷருடைய கட்டளைகள்
யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள் (1 பேருது 2:13).
•உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் பண்ணக் கடவன் (யாக்கோபு 5:13).
•விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை
இரட்சிக்கும் (யாக்கோபு 5:15).
•கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்கிற எவனும் இரட்சிக்கப்படுவான் (ரோமர் 10:13).
•சமாதானத்தைக் கூறி நற்காரியங்களை அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு
அழகானவை! (ரோமர் 10:15).
•உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. (ரோமர் 12:9).
•தீமையை வெறுத்து நன்மையை பற்றிக்
கொண்டிருங்கள் (ரோமர் 12:9).
•அசதியாயிராமல் ஜாக்கிரதையாய் இருங்கள் (ரோமர் 12:11)
•ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்
(ரோமர் 12:12).
•நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல,
நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க வேண்டும் (யோவான் 15:12).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.