தண்ணீர்ப் பந்தல், மக்கள் தங்கும் மண்டபங்கள், சுமை தாங்கிகள், வீடுகள் இவற்றை அழிப்பவர், கணவனற்ற சிறு பெண், கிழவி, பயந்தவள், தவஞ்செய்பவள் ஆகிய பெண்களை வஞ்சிப்பவர், மோசமாக வியாபாரஞ் செய்பவர், வட்டியிலும் லாபத்திலும் மோசம் செய்பவர், தலைமுடி, பால் இவற்றை விற்பனை செய்பவர், சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் வேலைக்காரர்களுக்கும் கொடுக்காமல் முன்னே சாப்பிடுபவர் இவர்களெல்லாம் நரகம் போகின்றவர்கள் என்று மேலோர் சொல்வர்.
பொறுமையும் மன உறுதியும் தர்ம காரியங்களில் உற்சாகமுமுள்ளவர், ஆசாரமுள்ளவர், மாதா பிதாக்களுக்குப் பணிவிடை செய்பவர், சகோதரரிடத்தில் அன்பு வைப்பவர், பொருளும் தேகவன்மையும் இளமையும் இருந்தும் புலனடக்கம் கொள்பவர், பழங்கள் முதலான பதார்த்தங்களையும், தானியங்களையும் தாமே விளைத்து அதன் பயனைத் தானம் செய்பவர் முதலானோர் சுவர்க்கம் போவர் என்று மேலோர் கூறுவர்.
கோபத்தில் பல கெடுதல்கள் உண்டாகும். தண்ணீரை அளவுடன் சூடு பண்ணிக் குளிப்பதுபோல, கோபமும் அளவுடன் இருக்க வேண்டும். இவ்வாறு காலத்துக்கு ஏற்றவாறு கோபத்தையும் பொறுமையையும் கையாள வேண்டும். அப்படி இரண்டின் அவசியத்தை தெரிந்து நடப்பவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் சுகம் ஏற்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.