"தங்கக் கை' மகான்!

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜர் - மரகதம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சேஷாத்ரி சுவாமிகள். மூன்று வயதில், தெருவில் பொம்மை விற்றுச் சென்றவர் கூடையிலிருந்து ஒரு கிருஷ்ணர் பொம்மையை சேஷாத்ரி கையால் தொட்டு
"தங்கக் கை' மகான்!
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜர் - மரகதம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சேஷாத்ரி சுவாமிகள். மூன்று வயதில், தெருவில் பொம்மை விற்றுச் சென்றவர் கூடையிலிருந்து ஒரு கிருஷ்ணர் பொம்மையை சேஷாத்ரி கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களில் அனைத்து பொம்மைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாம். எனவே அன்றிலிருந்து அவரை "தங்கக் கை' சேஷாத்ரி என்றே மக்கள் அழைத்தனர்.

 வேதம், பாஷ்யம், ஸ்லோகம் போன்ற அனைத்தையும் சிறுவயதிலேயே கசடறக் கற்றுணர்ந்தார். அவரது மனம் உலகியலில் நாட்டம் கொள்ளாமல் ஆன்மிகத்திலேயே லயித்திருந்தது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்திருந்த பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின்பு மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். அன்ன ஆகாரம் இன்றி மயானத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். மயானத்துக்குப் போகாமல் தடுக்க இவரை வீட்டு அறையில் பூட்டிவைத்தார்கள். ஆனால், பூட்டிய அறையில் இருந்த அவர் காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் இருந்ததைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். பல அற்புதங்களைச் செய்துகாட்டிய சேஷாத்ரி ஓர் அவதாரபுருஷர் என்பதை உறவினர் புரிந்து கொண்டனர்.

 தாயின் மறைவுக்குப் பின் அவரது அறிவுரையின்படி திருவண்ணாமலை திருத்தலத்தை வந்தடைந்து, ஜீவ சமாதி ஆகும் வரை திருவண்ணாமலையிலேயே தங்கி தவவாழ்க்கை மேற்கொண்டார்.

 சேஷாத்ரி சுவாமிகள் அங்கு வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். ரமணர் என்ற சிறுவனை உலகுக்கு அடையாளம் காட்டி, அவரை ஸ்ரீரமண மகரிஷியாக்கிய பெருமை மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளையே சேரும்.

 இம்மகானின் (முக்தியடைந்த) குருபூஜை மார்கழி மாதத்து ஹஸ்த நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத ஹஸ்தத்தில் இவருக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

 திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அக்னி லிங்கத்தை அடுத்து ஸ்ரீரமணாச்ரமத்துக்கு முன்னால் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் மகா சமாதி மற்றும் ஆசிரமம் உள்ளது.

 சென்னை, மாடம்பாக்கத்தில் உள்ள 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி விழா வரும் தை மாதம் 28-ஆம் தேதி (பிப்ரவரி 11-ம் தேதி) சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

 மாடம்பாக்கம் சபரிவார ஸ்ரீசக்ர மஹாமேரு 18 சித்தர் சக்திபீட பிருந்தாவனத்தில் நடைபெற உள்ள இந்த ஜெயந்தி விழாவில், கணபதி ஹோமம், கோமாதா பூஜை, அகோராஸ்தர ஹோமம் (மரணத்தை ஜெயிக்கக்கூடிய வேத மந்திரத்தால் சிவபெருமானைக் குறித்து செய்யப்படும் புனித வேள்வி), அஷ்ட பைரவர் ஹோமம், சுவாசினி பூஜை, செüபாக்ய லட்சுமி பூஜை ஆகிய பூஜைகள் நடைபெற உள்ளன.

 மகான் சேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு மகானின் அருளாசியைப் பெற்று, மகத்தான ஞானம் பெறுவோம்.

 தொடர்புக்கு:  044-249 38734/249 53793

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com