அகத்தியர் பூஜித்த விநாயகர்!

பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக மஹாகணபதி எழுந்தருளியிருக்கும் தலங்களில் ஒன்று கணபதி அக்ரஹாரம். தஞ்சை மாவட்டம், திருவையாறு - கும்பகோணம் சாலையில் (திருவையாற்றிலிருந்து 9 கி.மீ. தொலைவில்) உள்ளது கணபதி அக
அகத்தியர் பூஜித்த விநாயகர்!
Updated on
1 min read

பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக மஹாகணபதி எழுந்தருளியிருக்கும் தலங்களில் ஒன்று கணபதி அக்ரஹாரம். தஞ்சை மாவட்டம், திருவையாறு - கும்பகோணம் சாலையில் (திருவையாற்றிலிருந்து 9 கி.மீ. தொலைவில்) உள்ளது கணபதி அக்ரஹாரம். அவரது திருநாமத்தாலேயே விளங்கும் இந்த ஊரில், அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அகத்திய, கௌதம முனிவர்களால் பூஜை, வழிபாடு நடத்தப்பட்ட பிள்ளையார் தனி ஆலயத்தில் அருள்புரிகிறார். இந்த ஆலயத்தின் நுழைவாயிலில் அகத்தியர், கௌதமர் ஆகியோர் விநாயகப் பெருமானை பூஜை செய்வது போன்ற சிற்பத்தைக் காணலாம்.

 மகா கணபதிக்கு கோடி அர்ச்சனை செய்யும் வழக்கம் முதன் முதலில் இந்தத் தலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இவ்வாலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 15 நாட்களுக்கு நடக்கும் பிரம்மோற்ஸவமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வூரில் வினோதமான ஒரு வழக்கம் உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று களிமண்ணில் பிள்ளையார் செய்து வீட்டில் வைத்து பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருள்களை எடுத்துக் கொண்டு அனைவருமே ஸ்ரீமஹாகணபதி ஆலயத்திற்கு வருகின்றனர். இங்குதான் பூஜை, நிவேதனம் எல்லாம். கிராமத்தில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகவும் விளங்குகிறார் இந்த மஹா கணபதி.

 தற்போது இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வருகிறது. வருகிற ஜூன் 29ஆம் தேதி ஸ்ரீமஹா கணபதிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதசுவாமி, பாலசுப்ரமணியர் உள்ளிட்ட மற்ற பரிவாரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பூர்வாங்க, யாகசாலை பூஜை வைபவங்கள் வருகிற 25 ஆம் தேதி தொடங்குகிறது. காவிரி நதிக்கரையில் உள்ள கணபதி அக்ரஹாரத்திற்கு நாமும் சென்று விநாயகரை வழிபட்டு வளம் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com