நீதியை அவமதிக்கும் வகையில் நீதிமன்றங்களில் பொய்சாட்சி சொல்லக் கூடாது.
""பொய் சாட்சி கூறுவது கொடிய குற்றம்'' என்று நபிகள் நாயகம்(ஸல்) நவின்றதை ஹஜ்ரத் அனஸ் (ரலி) அறிவிப்பது புகாரி, முஸ்லீம் நூல்களில் காணப்படு
கிறது.
பொய்சாட்சி கூறுவதைப் போலவே பயந்தோ, பணிந்தோ துணிவின்றி சாட்சி கூற மறுப்பதும் கூடாத செயலே. இதனை கீழ்காணும் குர்ஆனின் 4-135வது வசனம் விளக்குகிறது. ""விசுவாசிகளே! நீங்கள் நீதியின் மீது நிலையானவர்களாகவும், உங்களுக்கோ உங்களின் பெற்றோருக்கோ உங்களின் நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். நீங்கள் யாருக்கு விரோதமாக சாட்சி கூறுகிறீர்களோ அவர் பணக்காரராகவோ, ஏழையாகவோ இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றும் அருகதை உடையவன் அல்லாஹ். ஆகையால் நீங்கள் பயந்தோ, இரக்கப்பட்டோ சாட்சியம் கூறுவதில் தவறிவிடாதீர்கள். நீங்கள் நீதி செய்வதில் மனோ இச்சைக்கு ஆளாகாதீர்கள். நீங்கள் சாட்சியத்தை மாற்றிக் கூறினாலும் அல்லது சாட்சியம் கூறாமல் புறக்கணித்தாலும் உங்கள் செயலை அல்லாஹ் நன்கு அறிவான்''.
அந்தந்த நாடுகளில் அவ்வப்பகுதிகளில் உள்ள பழக்க வழக்கத்தை ஒட்டி வியாபாரத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்படும் லாபம், நஷ்டம், ஏற்றம், தாழ்வு, போட்டி போன்ற நிலைகளில் சாட்சியை சாதகமாக சாட்சி சொல்லத் துன்புறுத்துவது பாவம் என்றும் திருக்குர்ஆனின் 2.282வது வசனம்
கூறுகிறது.
""வழக்கமிருப்பின் வர்த்தகத்திலும் சாட்சி வைத்துக்கொள்ளுங்கள். சாட்சியை ஒரு பக்கம் சாதகமாக நடக்கும்படி வற்புறுத்தாதீர்கள். அச்செயலும் பாவம்''.
அதுமட்டுமின்றி ""அனாதைகளின் பொருட்களுக்குப் பொறுப்பேற்று பராமரிப்பவர், அனாதைகள் உரிய வயதடைந்ததும் அப்பொருட்களை சாட்சிகளை வைத்துக்கொண்டு ஒப்படைக்க வேண்டும்'' என்றும் திருக்குர்ஆனின் 4-6வது வசனம் அறிவிக்கின்றது.
நாம் நல்ல காரியங்களில் சாட்சியம் சொல்லும் சந்தர்ப்பம் ஏற்படும்போது சாட்சி சொல்ல மறுக்காது, உண்மையை மறைக்காது இறைவன் தந்த மறை கூறும் அறவழியில் சாட்சி கூறி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.