வரம் தரும் வாளாடி ஈசன்!

சதுர்வேதி மங்கலம் என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது வாளாடி என்று அழைக்கப்படும் கிராமம். காயத்ரி நதிக்கரையில் அமைந்துள்ள தலம். இங்குதான் தென்திசை நோக்கி அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு கைல
வரம் தரும் வாளாடி ஈசன்!
Published on
Updated on
1 min read

சதுர்வேதி மங்கலம் என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது வாளாடி என்று அழைக்கப்படும் கிராமம். காயத்ரி நதிக்கரையில் அமைந்துள்ள தலம். இங்குதான் தென்திசை நோக்கி அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு கைலாசநாதர் ஆலயம் உள்ளது.

 ஆலய அமைப்பு: ஆலயத்தின் முகப்பை தாண்டியதும் விசாலமான பிராகாரம். இதையடுத்து மகாமண்டபம். அதன் எதிரே, அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில் அருள்மிகு கைலாசநாதர், லிங்கத்திருமேனியாக கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மண்டபத்தின் வலது புறம் அன்னை ஆனந்தவல்லி தென்திசை நோக்கி புன்னகை தவழும் முகத்துடன் காட்சி தருகிறாள்.

 தட்சிணாமூர்த்தி, துர்க்கை, விநாயகர், தண்டாயுதபாணி,சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள்புரிகின்றனர். ஆலயத்தின் வடகிழக்கே நவகிரகங்கள் உள்ளன. கிழக்கு பிராகாரத்தில் பைரவர் மற்றும் சூரியன் சந்நிதிகளை தரிசிக்கலாம். ஆலயத்தின் தென்கிழக்கில் தல விருட்சமான வில்வ மரம் உள்ளது.

 சிறப்புகள்: நவகிரக மண்டபத்தில் சூரியன் நடுநாயகமாக வீற்றிருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனை பார்த்த நிலையில் உள்ளது சிறப்பு. மேலும் இவ்வூரில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. ஊரின் மேற்கே விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

 திருப்பணி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. "ஸ்ரீலஷ்மி நாராயண பக்த ஜன சபா' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. 7.6.2012 அன்று கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 5.6.2012 அன்று யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. வாளாடியில் குடியிருக்கும் ஈசனை வழிபட்டு வரங்கள் பல பெறுவோம்.

 மேலும் தகவலுக்கு 98946 70723, 98424 70294.

 அமைவிடம்: திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி - லால்குடி பிரதான சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது வாளாடி. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி

 உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com