

சுமார் நூறாண்டுகளாக ஆலமரத்தடியில் அருளும் சுந்தரவிநாயகரை பிரதமர் நேரு, மதுரை வந்தபோது வழிபட்டுச் சென்றார். அன்றிலிருந்து இவரை ஆலாலய நேரு சுந்தரவிநாயகர் என்றே அழைக்கின்றனர். பாசம், அங்குசம், அபயம், வரதத்துடன் இவருக்கு 4 கரங்கள். மூலவரான விநாயகருக்கு மாதந்தோறும் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடந்தாலும், விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் 21 கனி மற்றும் பலகார வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. சுந்தரவிநாயருக்கு மஞ்சளை மாலையாகக் கட்டி தொடர்ந்து ஐந்து வாரங்கள் அணிவித்தால் தடை நீங்கி திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் கோயில் கொண்டு இவர் அருள் புரிகிறார்.
படம்: நங்கையர் மணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.