பகவானிடம் அன்பு எனும் முதலீடு

ஒப்புக்கொள்கிறேன், அடி நாஸ்திகர் தவிர மற்ற மக்கள் அனைவருக்கும் பகவானிடம் குறைந்த அளவாவது ஒரு பிரியம், பிரேமை இல்லாமல் போய்விடவில்லை.
Updated on
2 min read

ஒப்புக்கொள்கிறேன், அடி நாஸ்திகர் தவிர மற்ற மக்கள் அனைவருக்கும் பகவானிடம் குறைந்த அளவாவது ஒரு பிரியம், பிரேமை இல்லாமல் போய்விடவில்லை. அந்தப் பிரியத்திற்கு விளைவு  இல்லாமலும் போய்விடவில்லை. இப்படி எல்லா தேசங்களிலும் இருக்கிறவர்களின் ராக பக்தி, நல்லது பண்ணிக் கொண்டுதான் இருக்கும். ஆனால் அந்த நல்லதும் குறைவாகத்தான் இருக்கும். குறைவாக  முதல் போட்டால் வருவாயும் குறைவாகத்தானே இருக்கும்

விதிபோட்டுக் கொடுத்துள்ள கிரமமான வழிபாட்டிலே அந்த விதிகள், அதன்படி விதிக்கப்பட்ட மந்த்ர - தோத்திராதிகள், உபசாராதிச் சடங்குகள், மடி - ஆசாரம் ஆகியனவே, நமக்கு பிரேமை இருந்தாலும்  இல்லாவிட்டாலும், ஒரு கணிசமான அளவுக்கு நல்லது பண்ணிவிடும். போகப் போக இந்த விதி முறைகளே நம் இதயத்தில் ஈச்வர பிரேமையை வளர்த்தும் கொடுத்து விடும்.

எனவே பெரிய அளவில் நல்லது - லோக úக்ஷமம், ஆத்ம úக்ஷமம் - உண்டாக வேண்டுமானால் அடிப்படையான பிரமே பாவத்தோடு வைதேய பக்தியை வளர்த்திக் கொள்வதுதான் தற்போது நாம்  இருக்கும் நிலைக்கு ஏற்றது. ஸ்வாமியோ கொஞ்சம் பேருக்குத்தான் விதி பார்த்துப் பண்ணமுடியாதபடி அந்தராத்மாவிலிருந்து அநுராகம் பீறிட்டுக் கொண்டுவந்து பக்திப் பித்து, பக்தி போதை  என்கிறார்களே, அப்படி பரமாத்மாவுடன் கலந்திருக்கும் மனப்பான்மையைக் கொடுத்து விளையாடுகிறார்.

மற்றவர்கள், விதிப்ரகாரம் வந்துள்ள ஸ்தோத்ர - மந்த்ராதிகள், சடங்குகள் ஆகியவற்றுக்கு அவற்றுக்கென்றே உள் தெய்விக சக்தியைக் கொண்டுதான் நம்முடைய குறைந்த அநுராகத்தால் கிடைக்கக்கூடிய  குறைந்த அநுக்ரஹத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆக அடிப்படையாகக் கொஞ்சம் பக்தி பாவத்துடன் அனுசரிக்கிற வைதேய பக்திதான் பெரும்பாலாருக்கு ஆனது. இந்த வைதேய பக்தியில் ஒவ்வொரு தேசத்திலும் ஆங்காங்கு இருக்கிற மதத்தை  அனுசரித்து விதிகள் அமைத்திருக்கிற வழிபாட்டு க்ரமங்கள் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாமும் தெய்வ அனுக்ரஹத்தைப் பெற்றுத் தருகிற சக்தி இல்லாமல் போகவில்லை. இருந்தாலும் வேத  மந்திரங்களுக்கும், அவற்றைத் தழுவி ஆகம வழிபாட்டு க்ரமத்தில் வருகிற மந்த்ரங்கள், ஸ்தோத்ரங்கள், நாமாவளிகள், உபசார க்ரியைகள் ஆகியவற்றுக்கும் இந்த சக்தி விசேஷமாக இருக்கும்படி  பகவான் வைத்திருக்கிறான். அதோடு இந்த பாரத தேசத்து மண்ணில்தான் அந்த சக்தி பூர்ணமாகப் பலன் தரும்படியும் வைத்திருக்கிறான். ஏனென்று கேட்டால் என்ன சொல்வது ஏன் சுவிட்சர்லாந்தில்  இத்தனை நல்ல க்ளைமேட்டை வைத்துவிட்டு சஹாராவில் பொசுக்கி எடுக்கிறான் என்றால் என்ன சொல்வது ஒன்றும் சொல்லத் தெரியாவிட்டாலும் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்

மந்த்ர வீர்யமானது முழுப் பலனையும் தருவது நம்முடைய தேசத்தில்தான் - கர்ம பூமி எனப்படும் இந்த பாரத தேசத்தில்தான். இங்கே கர்மா என்றால் மந்திரங்கள் பிரயோகமாகிற சாஸ்த்ர கர்மா என்றே  அர்த்தம். அப்படிப்பட்ட இந்தக் கர்ம பூமியில் அந்த ஆத்மலிங்கமோ, ரங்கராஜ அர்ச்சையோ (விக்ரஹமோ) இருந்தால்தான் இலங்கை உள்பட எல்லா தேசங்களுக்கும் அதிக க்ஷேமம் என்பதால்தான்  விக்நேச்வரர் இப்படிச் செய்தது. தமது விகடமான ஸ்வபாவத்தால் வேடிக்கை, கோபம், அடி - தடி - குட்டுகிறது வேறே என்ன - பரம அநுக்ரஹம் என்று எல்லாம் கலந்த நாடகமாக இதைச் செய்தார்.

இப்படி உபயகாவேரி மத்தியில் அவர் பிரஸôதித்த அந்த úக்ஷத்ரம் விஷ்ணு தலங்களில் முதலாவதாகவும், காவேரி தீரத்திலுள்ள அத்தனை சோழ நாட்டு சிவ - விஷ்ணு ஆலயங்களுக்கும் மத்ய மணி  மாதிரியும் சிறப்புப் பெற்றுவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com