பார்வையை சீராக்கும் பரமன்!

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தம்பதி சமேதராக கோயிலுக்கு வர வேண்டும்.
பார்வையை சீராக்கும் பரமன்!
Updated on
1 min read

குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தம்பதி சமேதராக கோயிலுக்கு வர வேண்டும். அந்தக் கோயில் வளாகத்திலுள்ள நாகலிங்க மரத்திலிருந்து மூன்று பூக்களைப் பறித்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்தப் பூக்களை பிரசாதமாக பெற்றுச் சென்று பசும்பால் அல்லது மோரில் கலந்து மூன்று நாட்களுக்கு இரவில் பருக வேண்டும். இப்படிச் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த அந்தக் கோயில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுக்காவில் உள்ள நாச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில். தாயாரின் திருநாமம் தவமிருந்த நாயகி. அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க உலக மக்கள் நலமாக இருக்க பார்வதி தேவி பரமேஸ்வரனை நோக்கி ஊசியில் தவம் இருந்தாள். எனவே தவமிருந்த நாயகி என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறாள். இங்குள்ள குன்றின் மேல் கண்கெடுத்தவர், கண்கொடுத்தவர்,கொழுந்தீஸ்வரர் ஆகிய திருநாமங்களில் அருளும் மூன்று சிவன் சந்நிதிகள் இருப்பது சிறப்பு. இந்த சந்நிதிகளை வழிபட்டால் கண் பார்வை குறை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 கொழுந்தீஸ்வரரை மான் ஒன்றும், பசு ஒன்றும் வாயால் மலர்களை எடுத்து வந்து பூஜித்து வழிபட்டனவாம். ஒருநாள் தவறி பசுவின் குளம்பு சுவாமியின் சிரசில் பட்டது. அந்தத் தடம் இன்றும் லிங்கத்தின் சிரசில் காணப்படுகிறது. கொழுந்தீஸ்வரரை தொடர்ந்து 11 வாரங்கள் வழிபட்டால் உடலில் ஏற்படும் தீராத தழும்புகள் மறையும்.
 பிராகாரத்தில் பிரம்மா, தட்சிணாமூர்த்தி, நடராஜர், பெருமாள், வள்ளி - தெய்வானையுடன் முருகன் ஆகியோரும் அருள்புரிகின்றனர்.
 வைகாசி மாத பத்து நாள் பிரம்மோற்ஸவம், தெப்ப உற்ஸவம், சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி ஆகிய விசேஷங்கள் இங்கே சிறப்பாக நடக்கின்றன.
 மேலும் தகவலுக்கு: 98403 13651.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com