

மன்னார்குடி நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஒற்றைத் தெரு அருள்மிகு ஆனந்த விநாயகர் ஆலயம்.
கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் கல்வி நிறுவனங்கள். எனவே இங்கே படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியரின் இஷ்ட தெய்வம் இந்தப் பிள்ளையார்தான்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து விநாயகரை வழிபட்டு தியானத்தில் அமர்ந்தார். தியானம் முடிந்ததும், ""ஸ்ரீஆனந்த விநாயகர் பீடத்தின் கீழ் அமையப்பெற்றுள்ள ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். எனவே ஆனந்த விநாயகர் விசேஷமானவர். நிறைந்த சக்தியுடையவர். வேண்டுபவர்க்கு வேண்டிய வரங்களை தருபவர்'' என்று அருள் வார்த்தை கூறினார்.
அதன்படி தடைபடும் திருமணம் நடக்கவும், வேலை கிடைக்கவும், உடல் நலம் சீராகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறினால் சந்தனக் காப்பு செய்து வணங்குகின்றனர்.
இத்தகைய பெருமை வாய்ந்த இவ்வாலயத்தில் பாலாலயம் முடிந்து திருப்பணிகள் நடைபெறுகின்றன. கருவறை விமானப் பணிகள், முன் மண்டபம், அர்த்த மண்டபம், பிராகாரங்கள் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் தகவலுக்கு 94436 62489.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.