எல்லாருக்கும் சமநீதி!

சிரியா வெற்றிக்குப் பின் சிரியாவில் தங்கிய முஸ்லிம்கள் சிரியாவின் ஆடம்பர வாழ்வில் மயங்கி மது அருந்தவும் முனைந்தனர்.
எல்லாருக்கும் சமநீதி!
Updated on
1 min read

சிரியா வெற்றிக்குப் பின் சிரியாவில் தங்கிய முஸ்லிம்கள் சிரியாவின் ஆடம்பர வாழ்வில் மயங்கி மது அருந்தவும் முனைந்தனர்.

திருக்குர்ஆனின் 5-91வது வசனம், ""மதுவும் சூதும் உங்களுக்கிடையில் பகைமையையும் பொறாமையையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருக்கும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடும். அவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்கிறீர்களா?'' என்று கேட்கிறதே தவிர விலகச் சொல்லவில்லை என்று விபரீத வியாக்யானம் செய்தனர்.

சிரியா ஆளுநர் ஹழ்ரத் அபூ உபைதா (ரலி) அவர்கள் இந்த விபரீத விளக்கம் பற்றி கலீபா உமர் (ரலி) அவர்களுக்கு விரிவாக கடிதம் எழுதினார்கள். கலீபா உமர் (ரலி) அவர்கள், ""விலகிக் கொள்கிறீர்களா? என்று வினவி விலகச் சொல்லும் கட்டளையே இவ்வசனம். அல்லாஹ்வின் இக்கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டும். கட்டுப்படாது மது குடிப்போருக்கு எண்பது சவுக்கடி

தண்டனை தர வேண்டும்'' என்று பதில் எழுதினார்கள். இந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட மது அருந்துவோருக்கு எண்பது சவுக்கடி தண்டனை என்பது விதியாயிற்று. இவ்விதிக்கு வித்திட்டவர்கள் மதியூகி கலீபா உமர்(ரலி) அவர்கள்.

கலீபா உமர்(ரலி) அவர்களின் மகன் அபூஷஹ்மா மதுவருந்திய செய்தி கிடைத்ததும் உடனே விசாரணைக்கு உத்தரவிட்டார்கள் இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள். யூதன் ஒருவன் அபூ ஷஹ்மாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று பருகத் தந்த பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து விட்டான்.

மது கலந்திருப்பதை அறியாது குடித்த அருமை மகன் அபூஷஹ்மாவிற்கும் எண்பது கசையடி தண்டனை வழங்கிய கலீபா உமர்(ரலி) அவர்களை கசையால் அடித்தார்கள். கடுமையான அறுபதாவது கசையடியில் அபூஷஹ்மாவின் ஆவி பிரிந்தது. அணைத்து வளர்த்த மகன் இறந்தான்.

ஊருக்கு ஒரு நீதி உறவுக்கு வேறு என்று மாறுபடாது எல்லாருக்கும் சமநீதி வழங்கி நீதியை நிலை நிறுத்திய பொறுப்பான கலீபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சியை அகிலம் போற்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com