அனைவரும் சகோதரர்கள்!

பல நாடுகளையும் படை பலத்தால் வென்ற தார்த்தாரிய அரசன், வழியில் கண்ட சுல்தான் பாயஜுதின் ஆட்சியில் செழிப்புடனிருந்த துருக்கியை முன்னறிவிப்பின்றி தாக்கினான்.
Updated on
1 min read

பல நாடுகளையும் படை பலத்தால் வென்ற தார்த்தாரிய அரசன், வழியில் கண்ட சுல்தான் பாயஜுதின் ஆட்சியில் செழிப்புடனிருந்த துருக்கியை முன்னறிவிப்பின்றி தாக்கினான். எதிர்பாராத தாக்குதலை  தைரியமாக எதிர்த்துப் போரிட்ட துருக்கியர்களால் தார்த்தாரியர்களை வெல்ல முடியவில்லை. கைதான துருக்கிய போர்க் கைதிகள் தைமூர் முன் நிறுத்தப்பட்டனர். அந்தக் கைதிகளில் ஓர் இளைஞன்  அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான். அவனின் அஞ்சாமையையும் போர்க்களத்தில் விஞ்சி நின்ற அவனின் வீரத்தையும் வியந்ததார்த்தாரிய வீரர்கள் வியப்பை வெளியிட முடியாமல் தவித்தனர்.

இடுப்பிலும் கால்களிலும் விலங்கிடப்பட்ட அந்த இளைஞன் வீரத்தோடு நிமிர்ந்து விவேகமாகப் பேசினான்.

"அரசரே! முரசறிவித்து முன்னேற்பாடு செய்யாது, முறையாக எச்சரிக்கை எதுவும் கொடுக்காது முரட்டுத்தனமாக பாயஜீதைத் தாக்கினீர். அல்லாஹ்வின் படைப்பில் உயர்ந்த மக்களை மடியச் செய்தீர்.  உலகை வென்றவன் என்று புகழ்ப் பெறும் உமது பேராசையால் ஏற்பட்டதே இந்தப் பேரழிவு''. "இன்னும் சிறிது நேரத்தில் நான் தூக்கிலிடப்படுவேன். நான் செல்லப் போகும் அந்த இடத்திற்கு நீரும் வர

வேண்டும். அங்கே அரசர்களுக்கு எல்லாம் பேரரசரான அல்லாஹ்வின் முன் உமது கொடுங்கொலைகளுக்கு என்ன காரணம் கூறுவீர்''.-பேசிய இளைஞன் தலையிலிருந்த இரும்புத் தொப்பியை எடுத்துக்  கீழே போட்டான். நெளிந்த நீண்ட கூந்தல், அந்த இளைஞன் ஆணல்ல, அழகிய பெண் வீராங்கனை என்பதை விளம்பியது. தைமூர் திகைத்தான்.

அந்தப் பெண் பேச்சைத் தொடர்ந்தாள். "அண்ணல் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு போர்களில் கலந்து கூடாரங்களில் தங்கி வீரர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்து காயமுற்ற வீரர்களைக் கவனித்து  மருத்துவம் புரிந்த உம்முரதிய்யா(ரலி) அவர்களின் வழியில் நானும் போர் புரிந்தேன்''. "நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே. ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையே ஒழுங்கையும்

சமாதானத்தையும் நிலை நிறுத்துங்கள். அல்லாஹ்விற்கு அஞ்சி நடந்திடுங்கள். அல்லாஹ்வின் அருளை அடைவீர்கள்'' என்ற குர்ஆனின் 49-10வது வசனத்தை நினைவுபடுத்தினாள். அந்த வீராங்கனை  ஹமீதா பானு. தவறை உணர்ந்து வருந்திய தைமூர் கைதான வீரர்களை விடுதலை செய்தான். அந்த வீராங்கனையின் சம்மதம் பெற்று ஹமீதாபானுவை மணந்தான். அந்த மண மக்களின் பரம்பரையில்  வந்த வாரிசுகளே இந்தியாவை ஆண்ட மொகலாயர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com