ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வியாபாரத்தை விருத்தியாக்கும் வீரனார்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் உள்ள சித்தமல்லி கிராமம் பல வகையிலும் சிறப்பு வாய்ந்தது.

News image
Updated On :16 மே 2013, 11:15 am

வீரபாண்டியன்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் உள்ள சித்தமல்லி கிராமம் பல வகையிலும் சிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் சித்தர்கள் தவமிருந்து இறைவனை அடையும் பேறு பெற்றதால் சித்தர்மல்லி  என்ற பெயர் ஏற்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி சித்தமல்லி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கே ஜபம் செய்பவர்களின் பலன் ஒன்றுக்கு நூறு மடங்கு சித்திக்கும் என்ற காரணத்தாலும்  சித்தமல்லி என்று அழைக்கப்படுகிறது.

இக்கிராமத்தில் அபிராமி அம்பாள் சமேத குலசேகர ஸ்வாமி ஈஸ்வரன் ஆலயமும், கல்யாண வெங்கடேசப் பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளன. இங்கே காஞ்சி மகாசுவாமிகளுக்கு கல்வி  போதித்த குருவிற்கு அதிஷ்டானம் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இவ்வூரின் காவல் தெய்வமாக அருள் பாலித்து வருகிறார் ஸ்ரீஆகாச வீரனார். இவரை வழிபட்டால் தீராத வியாதியும் தீரும்,  வியாபாரம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீஆகாச வீரனாருக்கு பழங்காலத்திலிருந்து தீபத்தின் மூலமே வழிபாடு நடைபெறுகிறது. கதை மற்றும் அரிவாள், சந்நிதியில் வைக்கப்பட்டு அவற்றுக்கு படையல் போடுவது மரபு. சந்நிதிக்கு எதிரில்  ஆகாச வீரனாரின் குதிரை கம்பீரமாக வீற்றிருக்கிறது. தற்போது ஸ்ரீஆகாச வீரனாருக்கு உருவச் சிலை அமைக்கப்பட்டு புதிதாக ஆலயம் நிர்மாணிக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. பரிவார  தெய்வங்களுக்கு ஆலயம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. மேலும் வலம்புரி விநாயகருக்கும், பாலமுருகனுக்கும் புதிய சந்நிதிகள் அமைய உள்ளன. தற்போது திருப்பணிகள் மீதமுள்ள நிலையில்  வருகிற 29 ஆம் தேதி ஆகாச வீரனார் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 27ஆம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன.

தகவலுக்கு 94441 01502

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.