ஐயம் தவிர்!

ஒரு நாள் கலீபா உமர் (ரலி) அவர்கள் மகன் அப்துல்லாஹ்(ரலி) அவர்களுடன் ஊரைச் சுற்றி வரும்பொழுது ஒரு மனிதர் கேவிக்கேவி அழுவதைக் கண்டு அழுவதன் காணத்தைக் கேட்டார்கள்.
Updated on
2 min read

ஒரு நாள் கலீபா உமர் (ரலி) அவர்கள் மகன் அப்துல்லாஹ்(ரலி) அவர்களுடன் ஊரைச் சுற்றி வரும்பொழுது ஒரு மனிதர் கேவிக்கேவி அழுவதைக் கண்டு அழுவதன் காணத்தைக் கேட்டார்கள். பனீ தமீம் இனத்தினரான அவர் "நான் தவறாக மது அருந்தியதற்குத் தண்டனையாக ஆளுநர் அபூமூஸா (ரலி) அவர்கள் என்னைச் சவுக்கால் அடித்து முகத்தைக் கருகச் செய்தார். மக்கள் முன் என்னை நிறுத்தி என் அருகில் அமர்ந்து யாரும் உண்ணவோ பருகவோ கூடாது. என்னுடன் எவரும் எத்தொடர்பும் கொள்ளக்கூடாது என்று ஆணையும் பிறப்பித்து விட்டார். நான் அழாமல் என் செய்வேன்?'' என்று விடையை வினாவில் முடித்தார்.

பதிலைக் கேட்டு பதைத்த கலீபா ஆளுநருக்கு அவசர கடிதம் எழுதினார். "மது அருந்துவது குற்றம். குற்றத்தை ஒப்புக்கொண்டு தவறைத் திருத்திக்கொண்டு திருந்தி வாழ உறுதி அளித்தவருக்கு பொல்லாத தண்டனை பொருத்தமானது அன்று. இத்தகு கொடுஞ்செயல் இனியும் நடந்தால் உங்கள் முகத்தைக் கருகச் செய்து நகர்வலம் அழைத்துச் செல்லப்படும். பனீ தமீம் இனத்தினரான இம்மனிதரை மக்களோடு கலந்துறவாடச் செய்யுங்கள். குற்றத்தை ஒப்புக் கொண்டு தவறிழைக்காது வாழ உறுதிமொழி கொடுப்பவருக்கு உரிய வாய்ப்பளித்து அரிய வாழ்வு வாழ வழிவகுக்க வேண்டும். பழிக்கு ஆளாக்க வேண்டாம்''.

அம்மனிதருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இழப்பீடாக இருநூறு திர்ஹங்கள் வழங்கினார் இரண்டாம் கலீபா உமர்(ரலி) அவர்கள்.

ஹஜ் புனித பயண காலத்தில் எல்லா அதிகாரிகளும் ஆளுநர்களும் அரபாவில் கூட கட்டளையிட்டார் கலீபா. அதிகாரிகளால் ஆளுநர்களால் அநீதிக்கு உள்ளான மக்கள் குறைகளைக் கேட்டு முறையான நடவடிக்கை எடுத்தார். ""என் அதிகாரிகள் ஆளுநர்கள் மக்களுக்கு தீங்கிழைத்ததை அறிந்தும் விசாரித்த விரிவான நடவடிக்கை எடுக்கத் தவறுவேனாயின் நானே அந்த அநீதியை இழைத்தவனாவேன்''.

அதிகாரிகள் ஆளுநர்களுக்குத் தரப்படும் ஆணை கலீபாவிற்கும் பொருந்தும் என்று போதனையைச் சாதனையாக்கிக் காட்டியவர் கலீபா உமர் (ரலி) அவர்கள்.

வீதியோரத்தில் ஒரு இளைஞன் ஒரு பெண்úண்ôடு பேசிக்கொண்டிருந்தான். ஐயமுற்ற கலீபா உமர் (ரலி) அவர்கள் அந்த இளைஞனை சவுக்கால் அடித்தார்கள். அடிபட்ட அந்த இளைஞன் "இவள் என் மனைவி' என்று அலறினான்.

"மனைவி ஆயினும் மற்றோர் ஐயமுறும் வண்ணம் தெருவில் நின்று பேசலாமா?'' என்று கேட்டார் கலீபா.

"நாங்கள் வேற்றூர். எங்கு தங்குவது என்று பேசிக்கொண்டிருந்தோம்'' என்றான் அந்த இளைஞன்.

பதிலைக் கேட்டதும் கலீபா அவரின் கையிலிருந்த சவுக்கை இளைஞன் கையில் கொடுத்து அவரை அடிக்கச் சொன்னார். இளைஞர் மறுத்தார். கலீபா மீண்டும் மீண்டும் மும்முறை வேண்டியும் அடிக்க மறுத்த அந்த இளைஞர் அல்லாஹ் உங்களை மன்னிப்பான் என்று கூறினார். அந்தத் தம்பதிகளுக்குத் தங்க இடமளித்த கலீபா உமர் (ரலி)அவர்கள் அந்தத் தம்பதியினரின் நல்வாழ்விற்கும் இறைவனிடம் இறைஞ்சினார்கள்.

உமர் (ரலி) அவர்களின் உன்னத வழிமுறைகளைப் பின்பற்றி நாமும் இறையருளைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com