

முருகப்பெருமான் அருள் பெற்ற ஞானியருள் குமரகுருதாசரான பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதருக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர். முருகப்பெருமானையே வாழ்வில் முழுதும் பற்றுக்கோடாகக் கொண்டு முருகனருளால் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். செந்தமிழில் 6666 பாமாலைகளைப் புனைந்து முருகனுக்குப் பூமாலையாகச் சூட்டி மகிழ்ந்தவர். அவர் இயற்றிய 6666 பாடல்களுள் 60ஆவது மண்டலத்தில் 4-ஆவது அத்தியாயத்தில் உள்ளது வேட்குழவி (குழவி-குழந்தை) வேட்கை. இது கலிநிலைத்துறையில் அமைந்த பாக்களை உடையது.
இப்பாடலின் அடிக்குறிப்பில், ""இருத்திருப்பத்து, காலை, மாலை பூஜிக்கப்பட்டுப் பத்திப்பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்'' என்று பாம்பன் சுவாமிகள், இப்பாடலைப் படிப்பதனால் உண்டாகும் பலனைக் குறிப்பிட்டுள்ளார்.
நன்மக்கட் பேற்றை விரும்புபவரும் சந்ததி விருத்தியாக விரும்புபவரும் இதைப் பாடிப் பலன் பெறலாம். வேட்குழவி வேட்கையில் மொத்தம் பத்துப் பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் இங்கே.
பதினே டொழன்றும்விழை செய்ய பாதமோலிடநன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவி நினைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே! (1)
சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவி
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கினிறனவே! (2)
மீதமுள்ள 8 பாடல்களையும் தேடிப்பிடித்து மனமொன்றிப் படித்து மழலைச் செல்வத்தைப் பெற்று மகிழுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.