வசிஷ்டருக்கு இரங்கிய வேங்கடேசர்

திருமலை வேங்கடேசப் பெருமான் பக்தர்களின் பொருட்டு பல்வேறு திருத்தலங்களில் அதே கோலத்துடன் காட்சியளிக்கிறான்.
வசிஷ்டருக்கு இரங்கிய வேங்கடேசர்
Published on
Updated on
1 min read

திருமலை வேங்கடேசப் பெருமான் பக்தர்களின் பொருட்டு பல்வேறு திருத்தலங்களில் அதே கோலத்துடன் காட்சியளிக்கிறான். அவ்விடங்களில் கோயில் கொண்டுள்ள பெருமாளின் திருநாமங்கள் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்று அழைக்கப்படுகின்றன.

அந்த வகையில் வசிஷ்ட மகரிஷியின் தவத்திற்கு இரங்கி பிரஸன்ன வேங்கடேசராக அருள்பாலிக்கும் இடம் தஞ்சையில் உள்ளது. முன்பு வசிஷ்டேச்வரத் தலம் என்று அழைக்கப்பட்ட கரந்தை பகுதிக்கு தென்மேற்கே அய்யன் கடைவீதிக்கு அடுத்து ஸ்ரீபிரசன்ன வேங்கடேசர் ஆலயம் அமைந்துள்ளது.

ஸ்ரீபிரசன்ன வேங்கடேசரின் தல புராணத்தை, காலவர், வியாஸரின் வழியாக வெளியிட்டதால் இத்தலத்திற்கு "ஆதிகாலவ úக்ஷத்திரம்' என்ற மற்றொரு பெரும் உண்டு. இவ்வாலயத்தில் எம்பெருமான் உபய நாச்சிமாருடன், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கிறார். எம்பெருமான் எதிரில் ஆஞ்சநேயர், கருடன் ஆகியோர் அருள்புரிகின்றனர். இவ்வாலயத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com