"ஸ்ரீ' என்பது சைவர்களிடையே எதிர்மறை விளக்கம் தருகிறது என்ற கருத்தில் எழுதியுள்ளார்கள். எனக்கு தெரிந்தவரையில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும் கண்டிப்பாக எதிர்மறையான அர்த்தம் இருக்காது.
"ஸ்ரீ கண்ட பார்வதி நாத' என்ற ஒரு நாமா வருகிறது. அதன் அர்த்தம், கொடிய விஷத்தை தொண்டையில் நிறுத்திக் கொண்டவனே என்று எழுதியுள்ளார். அதற்கு அர்த்தம் "ஸ்ரீ' என்ற "திரு' கழுத்தில் கட்டிக் கொள்ளும் தாலி, மஹாலக்ஷ்மி என்பதாக சொல்வார்கள். திருவாகிய திரு மாங்கல்யத்தை பார்வதி தேவியின் கழுத்தில் (ஸ்ரீகண்ட) அணிவித்து பார்வதியின் கணவனாக (நாதன்) விளங்குபவனே என்றுதான் பொருள் இருக்க முடியும் ஆகையால் ஸ்ரீ என்ற சொல் (விஷத்தை) நஞ்சை கண்டிப்பாக குறிப்பது அல்ல.
- வி. ராகவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.