ஒரு காக்கை இருக்கிறது. எங்கேயோ ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு நம் தோட்டத்திலே வந்து எச்சமிடுகிறது. அந்தப் பழத்தின் கொட்டை இங்கே நம் தோட்டத்தில் விழுந்து மரமாகிறது.
அந்தக் காக்கை நமக்கு ஓர் உபகாரம் பண்ணிவிட்டது. நாய் காவல் காக்கிறது. குதிரையை வண்டியில் கட்டி சவாரி பண்ணுகிறோம். கோமாதா நமக்கு பௌதிகமாகவும், ஆத்மார்த்தமாகவும், பண்ணுகிற உபகாரம் கொஞ்ச நஞ்சமல்ல.
இப்படி எல்லோரிடமும் உபகாரம் பெற்றுவிட்டு, மனுஷ்ய ஜன்மா எடுத்துள்ள நாம் பிரதி உபகாரம் பண்ணாமல் இருந்தால் பாபமல்லவா? "நன்றி மறப்பது நன்றன்று' "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என்றெல்லாம் மஹா பெரியவர் வள்ளுவர், இன்னும் மனு, வியாஸர் எல்லோரும் சொல்கிறார்களே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.