

"கண்ணனை நினைப்போர் சொன்னது பலிக்கும்,
இந்தக் கவசம் படிப்போர் கவலைகள் பறக்கும்'
"அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே''
என்று ஆரம்பிக்கின்றது, கவியரசு கண்ணதாசன் எழுதிய "கிருஷ்ண கவசத்தின்' பாடல் வரிகள். குறுந்தகடாக வெளிவந்திருக்கும் இந்தக் கிருஷ்ணகவசத்தை, தேனினும் இனிய குரலில் பாடி தெய்வாம்சம் இழைய, கேட்போரை ஞானமழையில் குளிர்விக்கின்றார் பாடகி வாணி ஜெயராம். "கண்ணன் கவசம் வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம்' என்பதாகத் தொடரும் பாடல் வரிகள் கண்ணனை, அந்த மாயவனை, ஆயர் குலத்தில் பிறந்த மணிவிளக்கை, கம்சனை வதைத்தப் பரந்தாமனை, எண்ணி எண்ணி மகிழச் செய்கின்றது. வாழ்வின் கவசமாக விளங்கும் கிருஷ்ண கவசத்தைக் கானமாக கேட்டு மகிழ்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.