காவாந்தண்டலம் ஸ்ரீ விசுவநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம்!

காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது காவாந்தண்டலம் ஸ்ரீவிசுவநாதர் ஆலயம்.
காவாந்தண்டலம் ஸ்ரீ விசுவநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம்!
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில், உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது காவாந்தண்டலம் ஸ்ரீவிசுவநாதர் ஆலயம். செய்யாற்றின் கரையில் அமைந்துள்ள இவ்வாலயம், பித்ரு சாபத்தை நீக்கும் பரிகார ஸ்தலமான காசி. கயா, ராமேஸ்வரத்திற்கு இணையாகக் கருதப்படுகிறது!

ஒரு சமயம் காசியப முனிவர் கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கி வரும் போது, அவருடைய தந்தையார் மரணம் அடைய, அஸ்தியை காசி, கங்கையில் கரைப்பதற்காக காசிக்கு செல்ல தருணம் எதிர்பார்த்திருந்தார் காசியபர். அஸ்தியானது முல்லைப் பூவாக மாறியது. மோட்ச கதி அடைந்ததையும் மறைமுகமாகத் தெரிவித்தது. இந்த நிகழ்வு நடந்தபிறகு, காசியப முனிவரின் வேண்டுதலுக்கிணங்க, செய்யாறு கங்கையாகவும், அங்குள்ள லிங்க மூர்த்தம், ஸ்ரீ விசாலாட்சி சமேத விசுவநாதராகவும் காட்சியளித்ததாக தலவரலாறு தெரிவிக்கிறது.

தற்போது கிராம மக்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களின் உதவியினால் திருப்பணி வேலைகள் நடைபெற்று, 22.06.2014 ஆம் தேதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

தொடர்புக்கு: 98400 53289.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com