அமுத மொழிகள்

வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும். அது உள்ளன்போடு செய்வதாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மையிருப்பவர்கள் தோற்க மாட்டார்கள்.
Published on
Updated on
1 min read

• வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும். அது உள்ளன்போடு செய்வதாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மையிருப்பவர்கள் தோற்க மாட்டார்கள். வழிபாட்டில் பலன் கிட்டவில்லையாயின் வழிபாட்டை உண்மையுடன் செய்யவில்லை என்று உணர வேண்டும்.

• நலம் என்றால் என்ன பொருள்? உண்பதுவா? உறங்குவதுவா? மனைவி மக்களுடன் வாழ்வதுவா? இல்லை. தெய்வ உணர்ச்சி ஒன்றுதான் நலம். ஒன்றைப் பெற்றால் நலம் என்பது உலகியல்; எல்லாவற்றையும் இழப்பது நலம் என்பது அருளியல்.

• எந்தத் தருமத்தையும் செய்ய முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தாக விடாய் கொண்டவனுக்குத் தண்ணீர் கொடுத்தால் போதும். ஒருவன் ஒரு பசுவுக்கு ஒருநாள் தண்ணீர் கொடுத்து உபசரித்தவன் அவன் முன்னோர்களாகிய ஏழு தலைமுறையைக் கரையேற்றுகிறான். தண்ணீரின் குணம் தெய்வீகமானது. எனவே, தவித்த வாய்க்குத் தண்ணீர் தர மறக்க வேண்டாம்.

• பரிசுத்தமான நல்லவர்கள் மீது இல்லாத ஒரு பழியைக் கூறி எவன் தூற்றுகிறானோ, அவன் அந்த நல்லவர்களுடைய பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ளுகிறான். பாவங் குறையும் வழி இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com