சீனிவாச நல்லூர் தலைவெட்டி மாரியம்மன்!

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் திருநாகேஸ்வரம் திருத்தலத்திற்கு முன்னால் உள்ளது
சீனிவாச நல்லூர் தலைவெட்டி மாரியம்மன்!
Updated on
1 min read

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலையில் திருநாகேஸ்வரம் திருத்தலத்திற்கு முன்னால் உள்ளது சீனிவாச நல்லூர். இவ்வூரில் அமர்ந்து சிறப்பாக அருள்பாலிக்கிறாள் தலைவெட்டி மாரியம்மன். ஊர்மக்கள் பல வருடங்களுக்கு முன்பு வயல் வெளியில் தலையில்லாத மாரியம்மன் சிலையை கண்டு எடுத்திருக்கிறார்கள்.

"உருவமற்ற இறைவிக்கு தலையில்லாமல் இருப்பது குறையல்ல' என்று கருதி ஊர் மக்கள் உடனே ஆலயம் எழுப்பிவிட்டார்கள். பெரும் சக்தி வாய்ந்த கடவுளாக இவ்வூர் மக்களால் வழிபடப்பெறுகிறாள் தலைவெட்டி மாரியம்மன்.

"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போக வேண்டும்' என்றால் தலைவெட்டி மாரியம்மனை வழிபட வேண்டுமாம். ""நினைத்ததை நடத்திக்கொடுப்பாள் எங்கள் அன்னை'' என்கிறார்கள் பல வருடங்களாக இந்த அம்மனை வழிபட்டுச் செல்லும் பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com