அகிலம் வசப்படும்

இஸ்லாத்தில் விதவைகள் மறுமணம் புரிய அனுமதி உண்டு. எனினும் விதவையின் விருப்பமின்றி கட்டாய கல்யாணம் செய்தல் கூடாது.
அகிலம் வசப்படும்
Updated on
1 min read

இஸ்லாத்தில் விதவைகள் மறுமணம் புரிய அனுமதி உண்டு. எனினும் விதவையின் விருப்பமின்றி கட்டாய கல்யாணம் செய்தல் கூடாது. விதவைகளும் திருமணத்தை விரும்பினால் விரும்பும் ஆண்களுடன் முறைப்படி திருமணம் செய்து வாழ்வதையே திருக்குர்ஆனின் 2:232 மற்றும் 240 ஆவது வசனங்கள் வலியுறுத்துகின்றன.

ராபியத்துல் அதவிய்யா ஒரு விதவை. அவ்விதவையை மணமுடிக்க விரும்பிய ஆன்மிக அறிஞர் ஹழ்ரத் ஹஸன் பஸரி அவரின் தோழர்களுடன் அனுமதி பெற்று அவ்விதவையின் வீட்டிற்குச் சென்றார். அவ்விதவைக்கும் சென்றவர்களுக்கும் இடையில் ஒரு திரை தொங்கியது. திரையின் ஒருபுறம் அவ்விதவையும் மறுபுறம் வந்தவர்களும் அமர்ந்தனர்.

வந்தவர்கள் ஹஸன் பஸரி அவ்

விதவையை மணமுடிக்க விரும்புவதாக விளம்பினர். அந்த அம்மையார் நான்கு கேள்விகள் கேட்டார்.

ராபியத்துல் அதவிய்யா:-

1. நான் ஈமானோடு மரணமாவேனா?

2. நான் கபருக்குள் புதைக்கப்பட்டபின் முன்கர் நக்கீர் என்னும் மலக்குக (வானவர்க)ளின் கேள்விகளுக்குச் சரியான பதிலைப் பகர்வேனா?

3. யுக முடிவு நாளான கியாமத் நாளில் மீண்டும் எழுப்பப்பட்டு தரப்படும் என் பட்டோலை என் வலக்கரத்தில் வழங்கப்படுமா?

4. சுவர்க்கம், நரகம் செல்லும் இரு கூட்டங்களில் எந்த கூட்டத்தில் நான் இருப்பேன்?

ஹஸன்பஸரி: இந் நான்கு கேள்விகளுக்குரிய விடைகளும் மறைவானவை. இறைவனே அறிந்தவை.

ராபியா: இந் நான்கிலும் முற்றிலும் வெற்றிபெற விழைந்து இறைவனின் உற்ற துணையை வேண்டி நெற்றியைத் தாழ்த்தி நித்தமும் வணக்கத்தில் இருக்கும் எனக்குத் திருமணம் செய்யும் எண்ணம் எப்படி வரும்? அல்லாஹ் அறிவை எப்படி அமைத்திருக்கிறான்?

ஹஸன்: அல்லாஹ் அறிவைப் பத்து பங்காக பிரித்து ஒன்பது பங்கை ஆண்களுக்கும் ஒரு பங்கைப் பெண்களுக்கும் அளித்திருக்கிறான்.

ராபியா: இச்சையை இறைவன் எப்படி பங்கிட்டிருக்கிறான்?

ஹஸன்: இச்சையையும் பத்து பங்குகளாக்கி ஒன்பது பங்கைப் பெண்களுக்கும் ஒரு பங்கை ஆணுக்கும் கொடுத்

துள்ளான்.

ராபியா:ஹஸனே! ஒன்பது பங்கு இச்சைகளை ஒரு பங்கு அறிவைக் கொண்டு அடக்கியாள என்னால் முடியும். ஒரு பங்கு இச்சையை ஒன்பது பங்கு அறிவு கொண்டு அடக்கிட முடியாமல் திருமணம் செய்ய துடிக்கிறீர்களே! இவ்வுலக வாழ்வை நிரந்தரமாய் நினைத்து தன் இச்சையை பின்பற்றியவன் துரத்தினாலும் துரத்தாவிட்டாலும் நாக்கைத் தொங்கப்போட்டு அலையும் நாய்க்குச் சமம் என்று நவிலும் நற்குர்ஆனின் 7-176 ஆவது வசனத்தை ஓதவில்லையா?

ஹஸன் பஸரி அறிவு தெளிவு பெற்று அவ்விடத்தை விட்டு அகன்றார். ""தன்னந் தனியே ஒரு நகரை வென்றுவிடும் வீரனை விட இச்சையை மிகைப்பவன் மிக்க வீரமுடையவன்'' என்று சுலைமான் நபி சொன்னார்கள்.

ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை அடக்கினால் அகிலமே வசப்படும். உலக மாயையில் வீழாது ஆன்றோனாய் சான்றோனாய் மேன்மையுடன் மேதினியில் வாழலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com