

தஞ்சாவூருக்கு அருகே இருப்பது கொள்ளம் பூதூர் என்னும் சிற்றூர். வெட்டாற்றின் வடகரையில் உள்ளது.
தனது அடியார் திருக்கூட்டத்தோடு முள்ளிவாய்க்கரையை அடைந்தார் திருஞானசம்பந்தர். ஆறு பெருக்கெடுத்தோடியது. வெள்ளத்தில் ஓடம் ஓட்ட முடியாமல், ஓடக்காரர்கள் ஓடங்களைக் கட்டி விட்டனர்.
திருஞானசம்பந்தருக்கோ, எதிர்க்கரையில் உள்ள கொள்ளம் பூதூர் இறைவனை வழிபட வேண்டுமென்னும் ஆசை.
ஓடத்தை அவிழ்த்தார். தான் ஏறிக் கொண்டு அடியார்களையும் அழைத்தார். தன் பக்தியையும் பாட்டையுமே துடுப்பாக்கி ஓடம் இழுத்தார். வெள்ளத்தை வென்று ஓடம் ஓடியது. அக்கரையை அடைந்து கொள்ளம் பூதூர் இறைவனை சம்பந்தரும் அடியார்களும் கும்பிட்டனர்.
கொள்ளம்பூதூரில் வெள்ளம் ஏறித்
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
"கொட்ட மேகமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல உந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.''
திருக்கொள்ளம்பூதூர் தலத்தினைச் சென்றடையும் வழி:
கும்பகோணம் வழியாகக் குடவாசல் செல்லும் பேருந்தில் சென்று கொள்ளம்பூதூரை அடையலாம். ஊருக்குப் பக்கத்தில் முள்ளியாறு எனப்படும் வெட்டாறு ஓடுகின்றது. இது அகத்திய காவேரி எனப்படும்.
இறைவன் - வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்
இறைவி - சௌந்தரநாயகி, அழகுநாச்சியார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.