மகாநந்திக்கு மகர சங்கராந்தி விழா!

தஞ்சாவூர் பெரிய கோயில் மகாநந்தியெம்பெருமானுக்கு மகர சங்கராந்தி பெருவிழா, ஜனவரி- 15, 16
மகாநந்திக்கு மகர சங்கராந்தி விழா!
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் பெரிய கோயில் மகாநந்தியெம்பெருமானுக்கு மகர சங்கராந்தி பெருவிழா, ஜனவரி- 15, 16 தேதிகளில் நடைபெறுகின்றது. இதனையொட்டி ஜனவரி 15 (தை -1) ஆம் தேதியன்று, மகாநந்திகேஸ்வரருக்கு மாலை 6 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மறுநாள்,மாட்டுப்பொங்கலன்று காலை, பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் நடைபெறுகின்றது. மேலும் சிறப்பு நிகழ்ச்சியாக 108 பசு மாடுகளுக்கு கோ பூஜையும் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்துள்ளது. பக்தர்கள் இந்த தெய்வீக விழாவில் கலந்து கொண்டு நந்தி பெருமானின் அருளைப் பெறலாம்.

தொடர்புக்கு: 04362 223384, 274476.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com