தேவலோகத்தில் எல்லாருக்கும் சிவபிரான் வேலை களைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார்.
சிவபெருமான் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கையில் பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் சித்திரத்தை வரைந்தார். அதைப்பார்த்து மகிழ்ந்த பெருமான் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால்தான் அவர் "சித்திரபுத்திரன்' என்று பெயர் பெற்றார்.
"சித்திரம் என்பதற்கு ஆச்சரியமானது' என்றும் ஒரு பொருள் உண்டு. "குப்தன்' என்றால் "ரகசியம்' என்று பொருள். அவர் கணக்குகள் எழுதும் விதம் ஆச்சரியமாக இருக்கும். மேலும் எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதி விடுவார். எனவேதான் சித்திர புத்திரன் சித்திர குப்தன் எனப்பட்டார்.
சித்திர குப்தனுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள சித்திர குப்தர் கோயிலும் தேனி மாவட்டம், கோடாங்கிபட்டிக்கு மேற்கே தீர்த்தத் தொட்டி எனும் பகுதியில் சித்திர புத்திர நாயனார் என்ற பெயரில் ஒரு கோயிலும் உள்ளது.
(கிருபானந்தவாரியார் சொற்பொழிவிலிருந்து)
- சொ.மு. முத்து
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.