சிவாலயங்களில் தென்புறத்தில் தனிச்சந்நிதியில் கல்லால மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம். கல்லாலமரம் என்பது விழுதுகள் இல்லாத ஆலமரம் என்று சொல்லப்படுகிறது. இப்படியொரு விழுதுகள் இல்லாத ஆலமரத்தினைக் காண்பது அரிது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் "பொய்யாமொழி விநாயகர்' ஆலயத்தின் பின்புறம் மூன்று கல்லால மரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று போற்றுகிறார்கள். இந்த மூன்று மரங்களுக்கும் தினமும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த மரங்களை வலம் வந்து வணங்கினால் மன அமைதி, திருமண பாக்கியம், உடல்நலம் வளம் பெறுதல் மற்றும் கல்வி, கேள்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்று கூறப்படுகிறது. இம்மரத்தினடியில் தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றால் விரைவில் திரிகால ஞான யோகம் கிட்டும் என்பது ஐதீகம்.
இத்திருக்கோயில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ. தொலைவில் தீவனூர் என்னுமிடத்தில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து வாகன வசதிகள் உள்ளன.
- டி.ஆர். பரிமளரங்கன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.