இந்துமத அற்புதங்கள் 52: பேச வைத்த பெருமிதம்

மாணிக்கவாசகர் தில்லையில் வாழ்ந்து, சிதம்பரக் கூத்தனை, அம்பலவாணப் பெருமானை வழிபட்டு வருங்காலத்தில்,
இந்துமத அற்புதங்கள் 52: பேச வைத்த பெருமிதம்
Updated on
1 min read

மாணிக்கவாசகர் தில்லையில் வாழ்ந்து, சிதம்பரக் கூத்தனை, அம்பலவாணப் பெருமானை வழிபட்டு வருங்காலத்தில், ஈழ மன்னன் அங்கு வந்தான். அந்த மன்னனின் மகள் வாய் பேச முடியாதவள். ஊமையாக இருக்கும் தன் மகளைப் பேச வைக்குமாறு மாணிக்கவாசகரிடத்தில் வேண்டினான் ஈழ மன்னன்.

அந்தப் பெண்ணைத் தன் முன்னிறுத்திப் பாடத் தொடங்கினார் மாணிக்க வாசகப் பெருமான். பாடலில் கேள்விகளை வைத்துப் பாட, அக்கேள்விகளுக்கு பதில் சொன்னாள் அவள். கேள்வி - பதில் முறையில் அமைந்த அந்தப் பாடல்கள், "திருச்சாழல்' என்னும் பகுதியாகத் திருவாசகத்துள் காணப்படுகின்றன.

சிவன் திருவருளையும் தர்மநெறியையும் சொல்லுபவையாக அப்பாடல்கள் உள்ளன.

ஊமையாயிருந்த பெண்ணைப் பேச வைத்த

மாணிக்கவாசகரின் பதிகம்

"பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்

பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடீ

பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை

ஈசன்அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.''

சிதம்பரம் (தில்லை) தலத்தினைச் சென்றடையும் வழி:

தமிழகத்தின் பல இடங்களிலிருந்தும், சென்னை, கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், தஞ்சை முதலிய பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை - திருச்சி (மெயின் லைன்) இருப்புப் பாதையில் உள்ள புகைவண்டி நிலையம்.

இறைவன் - நடராசர், அம்பலக்கூத்தர், திருச்சிற்றம்பலமுடையார், அம்பலவாணர்.

இறைவி - சிவகாமி, சிவகாமசுந்தரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com