இந்துமத அற்புதங்கள் 52: வலம் வந்த கொலை யானை

திருநாவுக்கரசுப் பெருமானைக் கொல்ல முயன்றனர் சிலர். அவருக்குப் பலவிதமானதீங்குகள் இழைத்தனர்.
இந்துமத அற்புதங்கள் 52: வலம் வந்த கொலை யானை
Updated on
1 min read

திருநாவுக்கரசுப் பெருமானைக் கொல்ல முயன்றனர் சிலர். அவருக்குப் பலவிதமானதீங்குகள் இழைத்தனர். விஷம் கலந்த பால் கொடுத்தனர்; சுண்ணாம்புக் காளவாயில் இட்டனர். எதுவும் அவருக்குக் கேடு இழைக்காத, இழைக்க முடியாத நிலையில், வேறென்ன செய்யக் கூடும் என்று யோசித்தனர்.

மதம் கொண்ட யானையை அவர்மீது ஏவினால், அதனால் மிதிக்கப்பட்டு அவர் மாண்டு போவார் என்று கணக்குப் போட்டனர்.

அதன்படியே கொலைத் தன்மையுடன் மதம் கொண்ட யானையை அவரைத் தாக்க ஏவினர்.

எதிரே ஓடி வரும் யானை; தாக்குதல் வெறியுடன் வந்த கொலைக்களிறு.

சிவபெருமானை மனதில் குடி வைத்திருக்கும் நாவுக்கரசரா அஞ்சப் போகிறார்? அசையாது நின்று பதிகம் பாடினார். மலையாய் வந்த களிறு, மயங்கி நின்றது; கொள்ளையாய் வந்த களிறு பிள்ளையாய் அவரை வணங்கி வலம் வந்தது. (இது நடந்த இடம் திருவதிகை)

எதிர்ப்பட்ட மதயானைக்கு மருளாது நின்று,

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

""சுண்ணவெண் சந்தனச் சாந்தும்

சுடர்திங்கட் சூளா மணியும்

வண்ண உரிவை யுடையும்

வளரும் பவள நிறமும்

அண்ணல் அரண்முரண் ஏறும்

அகலம் வளாய அரவும்

திண்ணன் கெடிலப் புனலும்

உடையார் ஒருவர் தமர்நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை

அஞ்ச வருவதும் இல்லை.''

திருவதிகை தலத்தினைச் சென்றடையும் வழி:

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது. பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் பாதையில் சென்றால் திருவதிகையை அடையலாம். கோயில்வரை வாகனங்கள் செல்லும். பண்ருட்டி இருப்புப் பாதை நிலையம்.

இறைவன் - வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்

இறைவி - திரிபுரசுந்தரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com