இந்துமத அற்புதங்கள் 52: நோய் தீர்த்த வெண்ணீறு

திருநாவுக்கரசரைச் சூலை நோய் பற்றியது. பரசமயக் குழியில் வீழ்ந்ததனால் ஆனது அது என்பதை உணர்ந்தார்
இந்துமத அற்புதங்கள் 52: நோய் தீர்த்த வெண்ணீறு
Updated on
1 min read

திருநாவுக்கரசரைச் சூலை நோய் பற்றியது. பரசமயக் குழியில் வீழ்ந்ததனால் ஆனது அது என்பதை உணர்ந்தார் அவரின் தமக்கையார் திலகவதியார். நோயால் வாடித் தமக்கையிடம் வந்த நாவுக்கரசரை, சிவனைப் பணிந்தால் சூலை மறையும் என்று நம்பிக்கையோடு அரவணைத்தார் திலகவதியார். அதிகைபிரான் ஆண்டவனுக்குப் பணி செய்ய வா என்றழைத்துக் கொண்டு போனார்.

திருக்கோயில் வாயிலில் நின்று தம்பிக்குத் திருநீறிட்டு "நமசிவாய' என்னும் திருஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி உள்ளழைத்துக் கொண்டு போனார்.

அதிகாலை ஆண்டவனுக்குத் திருப்பள்ளிஎழுச்சி பாடும் வேளையில் இருவரும் சிவன் சந்நிதி முன்பு நின்றனர்.

சூலை நோய் மெல்ல மெல்லக் குறைந்தது.

கடுமையாய்த் தன்னை வாட்டிய கொடுநோய்

தீரத் தீரத் திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

"கூற்றாயின வாறு விலக்ககிலீர்

கொடுமைபல செய்தன நான்அறியேன்

ஏற்றாய் அடிக் கேஇர வும்பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதுஎன் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில

வீரட்டா னத்துறை அம்மானே.''

இந்நிகழ்ச்சியும் திருவதிகையில் நிகழ்ந்தது. இப்போதும் இத்தலத்துத் திருநீற்றை, மக்கள் நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். திருநீற்றை நீரில் கலந்து அருந்தினால், தீராத வயிற்று வலிகளும் தீர்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com