இந்துமத அற்புதங்கள் 52 - அள்ளிக் கொடுத்த அதிசயம்

திருவாவடுதுறைக்கு வந்த காலத்துத் திருஞானசம்பந்தருக்குப் பொருள் தேவைப்பட்டது. விண்ணப்பத்தைப் பாடலாக்கித் திருவாவடுதுறை மாசிலாமணி ஈசரிடத்தில் வைத்தார்.
இந்துமத அற்புதங்கள் 52 - அள்ளிக் கொடுத்த அதிசயம்
Updated on
1 min read

திருவாவடுதுறைக்கு வந்த காலத்துத் திருஞானசம்பந்தருக்குப் பொருள் தேவைப்பட்டது. விண்ணப்பத்தைப் பாடலாக்கித் திருவாவடுதுறை மாசிலாமணி ஈசரிடத்தில் வைத்தார்.

ஆயிரம் பொன் கொடுக்க உடனடி ஏற்பாடுகளைச் செய்தார் சிவபெருமான்.

பூதகணம் பொற்கிழியைக் கொண்டு வந்து பலிபீடத்தின் அருகே வைத்தது. எடுக்க எடுக்கக் குறையாமல் எப்போதும் ஆயிரம் பொன் இருக்கும் கிழியாக அக்கிழி, அதிசயக்கிழியாய் அமைந்தது. நிரந்தரமாய்க் கொடுக்கவல்ல அதற்கு "உலவாக்கிழி' என்றே பெயர்.

பொன் கேட்டு திருவாவடுதுறையில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

இடரினும் தளரினும் எனதுறுநோய்

தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை

மிடறினில் அடக்கிய வேதியனே

இதுவோஎமை ஆளுமாறு ஈவதொன்றுஎமக்கு இல்லையேல்

அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

இறைவன் - மாசிலாமணீசுவரர், கோமுக்தீஸ்வரர்

இறைவி - ஒப்பிலாமுலையம்மை, அதுல்யகுஜாம்பிகை.

திருவாவடுதுறை தலத்தினைச் சென்றடையும் வழி:

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சாலையில் ஆதீன வளைவு உள்ளது. திருவாவடுதுறை ஆதீனக் கோயில். அருகிலுள்ள இருப்புப் பாதை நிலையம் நரசிங்கன் பேட்டையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com