
ஆண்டுதோறும் மாசிமாதம் சுக்லபட்சம் பௌர்ணமி, மகம் கூடிய நன்னாளில் அன்பில் திவ்யதேசத்து பெருமாளும் உத்தமர் கோயில் திவ்தேசத்து புருஷோத்தமனும் திருவரங்கம் வடதிருக்காவிரியான கொள்ளிடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி மகோத்ஸவம் நடைபெறுகிறது.
இரண்டு திவ்யதேசத்து எம்பெருமான்களும் திருவரங்கம் திருமங்கை மன்னன் படித்துறையான பாடுவான் துறைக்கு அண்மையில் நடுக்காவிரியின் மணற்பிரதேசத்தில் அமைக்கப்பெற்ற தென்னங்கீற்றுப் பந்தலில் விஜயம் செய்து அருள்பாலிப்பர்.
திருவரங்கநாதனும் பல ஊர்களுக்கு பிரம்மோற்சவ நிமித்தமாக எழுந்தருளும்போது தோளுக்கினியான் அல்லது திருப்பல்லக்கிலே எழுந்தருளுவது போன்றே இவ்வெம்பெருமாள்களும் எழுந்தருளுவதால் அன்றைய நாள் முழுவதும் அவரவர்களுக்கென அமைக்கப்பெற்ற கீற்றுப் பந்தலில் காட்சிதருவோரைக் கண்டு சேவிப்பதே கண்பெற்ற புண்ணியமாகும்.
எனவே, மாசிமகத்தன்று அன்பில், உத்தமர்கோயில் திருமால்கள் வெயில் ஆரம்பிக்கும் முன்னர் கொள்ளிடத்தின் மணல் வெளியில் அருள்பாலித்து வெயில் தாழ்ந்தவுடன் அங்கிருந்து தன் திவ்யதேசம் எழுந்தருளுவது வழக்கமாக நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.