மகோத்சவம்
ப்ராசீன ஸம்ப்ரதாய நாட்டிய நாடக மன்றம் டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ ராதாகிருஷ்ண விவாஹ மகோத்சவம் கும்பகோணம் அருகில் தேப்பெருமாள் நல்லூரில் ஸ்ரீ லெக்ஷ்மி நாராயணப்பெருமாள் ஆலயத்தில் நடைபெறுகின்றது. தகவல்களுக்கு: 94436 77936.
நாள்: 7.2.2016.
ஆராதனை
இந்துமத தர்ம நெறியில் நடந்து ஸனாதன தர்மத்தை கடைபிடித்து வாழ்ந்துகாட்டிய மகான், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். ஸ்ரீமத்ராமாயணம், பாகவதம், ஸ்ரீமந் நாராயணீயம் போன்றவைகளில் உபன்யாஸம் செய்ததோடு மட்டுமில்லாமல் பாராயணத்திற்கென பல ஸ்தோத்திர நூல்களும் புனைந்துள்ளார். ஸ்ரீ ஸ்வாமிகளின் 12 ஆம் வருட ஆராதனை மகோத்சவம் திருச்சி அருகில் முத்தரசநல்லூர் பழூர் அக்ரஹாரத்தில் உள்ள அதிஷ்டான வளாகத்தில் நடைபெறுகின்றது.
தகவல்களுக்கு: 94889 79201, 99529 92126.
நாள்: 7.2.2016.
கும்பாபிஷேகம்
இவ்வுலகில் அவதார புருஷராக வந்துதித்து இறையருள் கிடைப்பதற்கு நல்ல வழியை காட்டிய மகான்களின் வரிசையில் போற்றப்படுபவர் அருள்திரு யாழ்ப்பாண ஆறுமுகச்சாமி சித்தர். இவருடைய ஜீவசமாதி தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள நதியில் நீராடி சமாதிகோயிலில் வழிபட்டு குருவருளுக்கு பாத்திரர்களாகி, திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், உடல்நலம், செல்வவளம் பெறுகின்றனர். இந்த சமாதிகோயிலின் மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. தகவல்களுக்கு: 94866 65654.
நாள்: 12.2.2016.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், அரசல் ஆற்றுக்கு தென்பாகம் மாத்தி கிராமம், அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம், அருள்மிகு பூர்ண புஷ்களாம்பிகா சமேத அய்யனார் ஆலயம், அருள்மிகு பிடாரி ஆலயங்களில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94431 30770.
நாள்: 10.2.2016, நேரம்: காலை 9.00 - 11.00.
திருப்பணி
புளியடி சந்தனமாரியம்மன்: திருச்செந்தூர் சிவன் கோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து செந்திலாண்டவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் புளியடித் தெரு முகப்பில் நடுநாயகமாகத் திகழ்கிறது புளியடி சந்தனமாரியம்மன் கோயில். பக்தர்கள் குடும்பத்துடன் தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபட்டு அன்னையின் அருள் பெறலாம்.
தொடர்புக்கு: 94867 14973
காசி விஸ்வநாதர்: கும்பகோணத்திற்கு அருகில் சந்திர பரிகார திருத்தலமான திருமாந்துறைக்கும் சுக்ரனின் ஷேத்திரமான கஞ்சனூருக்கும் மத்தியில் 48 மணலூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில். இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குபெறலாம்.
தொடர்புக்கு: 98411 29302, 99940 32380
ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள்: தஞ்சாவூர் மாவட்டம், ஆடு
துறையில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
தொடர்புக்கு: 94444 66332
ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ சுவாமி: சென்னை ஆதம்பாக்கம், முத்தியால்ரெட்டி நகரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் சக்ரத்தாழ்வார், தாயார் சந்நிதியில் 12 ஆண்டுகளாக நித்ய திருவாராதனம், வருடாந்திர உத்ஸவாதிகள் நல்லமுறையில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தில் திருப்பணி நடைபெறவிருப்பதால் பக்தர்கள் பங்கு கொண்டு நலம் பெறலாம்.
தொடர்புக்கு: 94441 16511
ஆஞ்சநேயர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுக்காவில் உள்ளது பாலவநத்தம் கிராமம். இக்கிராமத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரே 16 அடி உயரமுடைய ஆஞ்சநேயர் சிலை அமைக்கும் திருப்பணி நடைபெற்று வருகின்றது. மகாபலிபுரம் சிற்பக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவ்வூரைச் சேர்ந்த ஸ்தபதிகள் என சுமார் பத்திற்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்புக்கு: 04566 25738
பிரதோஷ வழிபாடு
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் திருக்கோயிலில் லட்சத்து எட்டு தீப ஒளியின் மத்தியில் 2016 வருடத்தின் முதல் மஹா பிரதோஷ வழிபாடு, மன்னர் வீரமார்த்தாண்டவர்மன் காலத்து பூஜை
மரபுப்படியே நடைபெறுகின்றது. தொடர்புக்கு: 96296 97040.
நாள்: 6.2.2016
அமாவாசை கிரிவலம்
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத பூதலிங்கசுவாமி திருக்கோயிலில் அருள்மிகு
சந்திரசேகரருக்கு அழகுமணித்தேரில் அமாவாசை கிரிவலமும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ நடைபெறுகிறது. இயற்கை எழில்மிகு குடவரைநாதர் திருக்கோயிலில் அமாவாசை அஷ்டாபிஷேகம், கிரிவலம் நடைபெறும்.
தொடர்புக்கு: 94863 25522.
நாள்: 8.2.2016, நேரம்: 6.00.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.