சர லக்னங்களுக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம்) பதினொன்றாமிடமும்; ஸ்திர லக்னங்களுக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்) ஒன்பதாமிடமும்; உபய லக்னங்களுக்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) ஏழாமிடமும் பாதக ஸ்தானம் என்று கூறப்பட்டுள்ளது.
பாதகாதிபதிகள் வலுவடையக் கூடாது என்று ஜோதிடம் அறிந்தோர் கூறுகின்றனர். இதை எங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேநேரம் அந்த கிரகங்கள் லக்ன சுபர்களாக அமையும் பட்சத்தில் பாதகாதிபத்யம் குறையும்.
லக்ன சுபர்களாக வரும் அந்த கிரகங்கள் பலம் பெறவில்லை என்றால் யோகம் உண்டாகாது என்று கூற வேண்டும்.
குறிப்பாக, ஸ்திர லக்னக் காரர்களுக்கு ஒன்பதுக்குடையவர்கள் பாதகாதிபதியாகவும் யோககாரகராகவும் வருகிறார்கள். அவர்கள் பலம் குறைந்து விட்டால் நன்மை விளையுமா என்ற கேள்வி எழுகிறது. அதனால் பாதகாதிபதிகள் நல்ல முறையில் பலம் பெற வேண்டும் என்பதே எங்கள் முடிவு.
சாதனையாளர்கள் யார்?
பொதுவாக, சாதனைகள் செய்யும் அனைவருக்கும் 1,5,9 ஆம் வீடுகள் வலுப்பெற்றிருக்கும்.
பொதுவாக, ஒன்றாம் பாவம் வலுத்திருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நல்ல உடல் வலிமையையும் திறமையையும் பெற்று இதர பாவங்களின் தன்மைகளுக்கு ஏற்ப தன்னை இயக்கிக் கொள்ளக்கூடும். இதனால் பெயர், புகழ் கூடும்.
ஐந்தாம் வீடும் வலுத்திருந்தால் நாடாளும் தகுதி, அரசியல் முக்கியத்துவம், மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சி பெறுவதற்குரிய சூழ்நிலை உருவாகக் கூடும். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அரசு அந்தஸ்தைப் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும்.
ஒன்பதாம் பாவமும் வலுத்திருந்தால் ஜாதகரால் தந்தை நலம் ஓங்கவும் பூர்வீகச் சொத்துகள் வளர்ச்சிஅடையவும் சட்டமன்றங்களில் அங்கம் வகிப்பதற்கும் சகல சௌபாக்கியங்கள், உலகம் முழுவதும் சுற்றும் வாய்ப்பும் சம்பாதித்த பணத்தை முறைப்படி முதலீடு செய்வதற்கும் வாய்ப்புண்டாகும்.
இத்தகையோர் சாதனையாளர்கள் என்றால் மிகையாகாது.
- ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.