தாரா பலன்

எந்த ஒரு ஜாதகரும் சுப காரியம் செய்ய விரும்பும் நாளுக்கு, தன் நட்சத்திரத்திலிருந்து அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வந்த தொகையை ஒன்பதால் வகுத்து கழிக்கவும்.
Published on
Updated on
1 min read

எந்த ஒரு ஜாதகரும் சுப காரியம் செய்ய விரும்பும் நாளுக்கு, தன் நட்சத்திரத்திலிருந்து அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வந்த தொகையை ஒன்பதால் வகுத்து கழிக்கவும். கழித்து வந்ததில் மீதி 2,4,6,8,9 வருவது மிகவும் உத்தமம்.
 சுப பலன் கொடுக்கும் தாரை: 2, சம்பத்து, 4. சுபம், க்ஷேமம், 6. தெய்வ அனுகூலத்தால் நற்பலன், 8. மைத்திரம், 9. பரம மைத்திரம்.
 அசுப பலன் கொடுக்கும் தாரை: 1. கவலை, 3. விபத்து, 5. காரியநாசம், 7. வதை.
 சந்திர பலன்: ஒருவருடைய ஜனன ராசி முதல் அன்றைய தினம் சந்திரன் நின்ற ராசி வரையில் எண்ணி வந்த தொகையால் கீழ்காணும் பலன்கள் கிடைக்கிறது. 1. இன்பம், 2, விரயம்/ நஷ்டம், 3. தன லாபம், 4, வியாதி, 5. பங்கம், 6. எதிரிகளை வெல்லும் வல்லமை, 7. சௌக்கியம், 8. விரோதம்/ பகை, 9. காரிய தாமதம், 10. தொழில் சேர்க்கை, 11. செல்வச் சேர்க்கை, 12. நஷ்டம் (கெடுதியான ராசியை ஒதுக்க வேண்டும்)
ராசிகள்- துறைகள்
 மேஷம்: காவல்துறை, ராணுவம், சர்வே, ஆலை, நெருப்பு சம்பந்தமான துறைகள்.
 ரிஷபம்: பயிர்த்தொழில், விவசாயம், பால், அரிசி, பட்டு, சங்கீதம், சர்க்கரை ஆலை, புகைப்படம், எக்ஸ்ரே, பெண்கள் சூழ்ந்த இடம், நீதிமன்றம்.
 மிதுனம்: பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், நூலகர், தரகர், காண்ட்ராக்டர், தூதர், டெலிபோன், காப்பீடு.
 கடகம்: பாசனத்துறை, கடற்கரை, மீன் வளத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், உணவுப்பொருள் வழங்குத் துறை, மகளீர் நலம்.
 சிம்மம்: அரசுத்துறை, தலைமைச் செயலகம், கஜானா, நாணயக் கிடங்கு, வங்கி, திட்டமிடல், சுகாதாரம், நகரமைப்பு.
 கன்னி: கல்வி, நூலகம், ஆசிரியர், கணக்கர், தமிழ்த்துறை, பத்திரப்பதிவு, வெளியீட்டுத்துறை, தேர்வாணையம், தபால், தந்தி.
 துலாம்: நீதித்துறை, வணிகவரித்துறை, கலைத்துறை, வனத்துறை, திரைப்படத் தணிக்கை, திரைப்படக் கல்லூரி முழுவதும் பெண்களுக்கான துறைகள்.
 விருச்சிகம்: மருந்தாளுனர், கால்நடை மருத்துவம், இயல்முறை மருத்துவம் (பிசியோதெரபி) , மதுபானக் கடைகள், தாய் சேய் நலவிடுதிகள்.
 தனுசு: அறநிலையத் துறை, கஸ்டம்ஸ், புத்தக வியாபாரம், மதத்தைச் சார்ந்து தொழில் புரிவோர், குழந்தைகள் காப்பகம், நிதி நிறுவனங்கள்.
 மகரம்: காரீயம், இரும்பு, எண்ணெய் உற்பத்தி அல்லது விற்பனை, அநாதை இல்லங்கள், சிறைத்துறை, கொல்லப்பட்டறை.
 கும்பம்: லிமிடெட் கம்பெனிகள், சீட்டு நிறுவனங்கள், பைனான்ஸ் நிறுவனம், கூட்டுறவுத்துறை, சுரங்கம், மின்சார எரி பொருள்கள்.
 மீனம்: திரவப்பொருள்கள், முத்து, மீன் எண்ணெய், மஞ்சள், கடன் வழங்குதல், ஜவுளி, மருத்துவத்துறை, அடிக்கடி பிரயாணம் செய்யும் போக்குவரத்து தபால் தந்தி.
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com