வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம்!

'இறைவன் அருளைப் பெற நாம் என்ன செய்வேண்டும்?' ஜீவகாருண்யத்தைப் பின்பற்ற வேண்டும்.
வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம்!
Published on
Updated on
1 min read

'இறைவன் அருளைப் பெற நாம் என்ன செய்வேண்டும்?' ஜீவகாருண்யத்தைப் பின்பற்ற வேண்டும். இதனால் அகத்தில் இருக்கும் இன்பம் வளர்ந்து பொங்கி எங்கும் பாயும். சதா ஆனந்த மயமாக நம்மை வாழவைக்கும். அதுவே அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெருங்கருணை திருவருளின் துணையை கொண்டு, நம் உள்ளிருந்து தழைத்துப் பொங்கும். "இறைவனுடைய அருளைப் பெற வேண்டும் என்றால் உயிர்கள் மீது அன்பு, தயவு, கருணை, இரக்கம் காட்ட வேண்டும்'' என்கிறார் வள்ளலார்.

அருட்பிரகாச வள்ளலார் தருமச்சாலையை 1867 ஆம் ஆண்டு நிர்மாணித்தார். சுவாமிகள் அன்று ஏற்றி வைத்த அடுப்பு இன்றும் அணையாமல், பசித்தவர்களின் பிணியை போக்கி வருகின்றது. வள்ளலார் சுவாமிகள் இயற்றிய முதல் நூல், "ஜீவகாருண்ய ஒழுக்கம்!'

"ஒரு ஜீவன் பசி, தாகம், பிணி, இச்சை, வறுமை, பயம், கொலை முதலியவற்றால் துன்பப்படுவதை இன்னொரு ஜீவன் பார்க்கும் போதும் அறிந்தபோதும் கேட்டபோதும் அந்த ஜீவனுக்கே தன்னை அறியாமலே உருக்கம் உண்டாகும். ஜீவன்கள் ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும் பெற்று இன்புறுவதற்கு அவைகளுக்குரிய உடம்பு மிகவும் அவசியம். இந்த உடம்புக்குப் பசியால் பெரும் அபாயம் ஏற்படும். பசிப்பிணி ஒன்றே பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்துவரும் கொடிய வியாதியாகும். பசிப்பிணியானது அறிவை மங்கச்செய்யும். கடவுளைப் பற்றிய நினைப்பு மறையும். நம்பிக்கை குலையும். கோபமும் தாபமும் பெருகும்'' என்று பசியால் ஏற்படும் பயங்கரத்தை வள்ளலார் சுவாமிகள் விவரிக்கிறார்.

"ஒரு ஜீவனுக்கு பசியினால் ஏற்படும் துன்பத்தைப் போக்குவதில் ஏற்படும் இன்பம்தான் மேலான இன்பம். இது யோக சித்திகளாலும் ஞானசித்திகளாலும் ஏற்படும் இன்பங்களுக்கு மேலான இன்பம். இவற்றின் மூலமாக முடிவாகக் கிடைக்கும் சுவர்க்க இன்பத்தைவிட மேலான இன்பமாகும்'' என்கிறார் வள்ளலார் சுவாமிகள்.
- டி.எம். இரத்தினவேல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com