மறை மலை நடுவே மஹாதேவன்!

ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரமாக எப்படி வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காடு விளங்குகிறதோ; அதுபோல் நான்கு வேதங்களாக, நான்கு மலைகளுக்கு நடுவே, தேசிய நெடுஞ்சாலையில்
மறை மலை நடுவே மஹாதேவன்!
Published on
Updated on
2 min read

ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரமாக எப்படி வேதாரண்யம் என்றழைக்கப்படும் திருமறைக்காடு விளங்குகிறதோ; அதுபோல் நான்கு வேதங்களாக, நான்கு மலைகளுக்கு நடுவே, தேசிய நெடுஞ்சாலையில் மீனம்பாக்கம், பல்லாவரம் இடையில் வலப்புறம் இன்னாட்டு, பன்னாட்டு விமான நிலையமும், இடப்புறம் 
என்னாட்டவர்க்கும் இறைவனான மஹாதேவன் திரிசூலநாதராக இங்கு குடிகொண்டுள்ளார்.
கோயில்களில் தொன்மையானது அருள்மிகு திருபுரசுந்தரி அம்மன் உடனுறை திருசூலநாத சுவாமி திருக்கோயில். இறைவன் அமைந்துள்ள கருவறையின் அமைப்பு தூங்கும் யானையின் பின்புறத் தோற்றம் போல் இருப்பதால் இதனை தூங்கானை மாடம் (கஜப்பிருஷ்டம்) என அழைப்பர். தொண்டை மண்டலத்திலுள்ள பல கோயில்களின் கருவறை அமைப்பு இது போன்றே இருக்கும் என்று தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் (ஓய்வு), ஸ்ரீ. கி. ஸ்ரீதரன் அவர்கள் விளக்கியுள்ளார். 
பிரம்ம தேவன், மஹாதேவனை இம்மலை நடுவே வைத்து பூஜை செய்து கடுமையான தவம் இருந்து, தன் படைப்புத் தொழிலை இடயூரின்றி செய்யும் ஆற்றலைப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவ்வூருக்கு "வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரும் இருந்துள்ளது. இதன் பெயருக்கேற்ப நான்கு வேதங்களை கற்றுத் தேர்ந்த விற்பன்னர்களைக் கொண்டு இக்கோயிலின் வேதம் ஓதப்பட்டது தெரிய வருகிறது.
திரிசூலநாதர் கோயில் தோன்றிய காலம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120), விக்ரம சோழன் (கி.பி. 1110-36), இரண்டாம் ராச ராசன் (கி.பி. 1146-68), இரண்டாம் ராசாதி ராசன் (கி.பி. 1163-78), மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178-1218) மற்றும் கி.பி.14-ஆம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் ஆகியோர் இக்கோயிலுக்கு பல பொருட்களையும் நிலங்களையும் தானமாக தந்துள்ளதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலின் அன்னை திரிபுரசுந்தரி சோழர் காலத்து சிற்பக்கலை அம்சமுடன் விளங்குகிறாள். இந்த அம்மன் சற்று பின்னம் ஏற்பட்டதால் திருசூலநாதரின் கருவறையிலேயே தெற்கு நோக்கி வைக்கப்பட்டு வழிபாடுசெய்யப்படுகிறது. புதிதாக செய்யப்பட்ட திரிபுரசுந்தரி அம்மன், தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளாட்சி செய்கின்றாள்.
இறைவனின் கருவறைக்கு தென்புறம் நாக யக்யோபவீத கணபதி வீற்றிருக்கிறார். இந்த கணபதி; நாகராஜனை பூணூலாக தரித்துக் கொண்டுள்ளார். 
நாக தோஷம் உள்ளவர்கள்; சதுர்த்தியன்று மாலை நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபட்டால் சர்ப்ப தோஷம் நீங்கப்பெறுவார்கள் என இக்கோயிலின் பரம்பரை சிவாச்சாரியார் கூறுகிறார். 
திரிசூலநாதருக்கு சிவராத்திரி அன்று இரவு நான்கு கால அபிஷேகமும், மார்கழி மாதம் முழுவதும் குறிப்பாக திருவாதிரை அன்று சிறப்பு வழிபாடும் மிகச் சிறப்பான அபிஷேக ஆராதனைகளும்; வெள்ளிக்
கிழமை மற்றும் நவராத்திரி 10 நாள்களும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு விதவிதமான அலங்காரத்துடன் மிக விமரிசையாக விழாக்கள் நடைபெறுகின்றன.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ளது இக்கோயில். காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை,கோயில் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
திரிசூலம் பேரூந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது. ஆட்டோக்கள் உண்டு. 
தொடர்புக்கு: 044-2264 2600 / 9444764162.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com