பொன்மொழிகள்!

ஒவ்வொரு விநாடி நேரமும், ஒரு சிறு துண்டு பொருளும் முறையே கல்வி கற்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் முக்கியமானவையாகும். நேரத்தை வீணடித்தால் கல்வி ஏது? பொருள்களை வீணடித்தால் பணம் ஏது?
பொன்மொழிகள்!
Updated on
1 min read

ஒவ்வொரு விநாடி நேரமும், ஒரு சிறு துண்டு பொருளும் முறையே கல்வி கற்பதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் முக்கியமானவையாகும். நேரத்தை வீணடித்தால் கல்வி ஏது? பொருள்களை வீணடித்தால் பணம் ஏது?

வேகமாக ஓடுவது குதிரைக்குப் பெருமை, கம்பீரமாக நடப்பது யானைக்கு அழகு, சாதுர்யமாக நடந்து கொள்வது பெண்ணுக்குப் பெருமை, ஏதேனும் ஒரு தொழில் (உத்யோகம்) செய்வது மனிதனுக்குப் பெருமை.

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மடிகிறது. இருந்தாலும் மீதம் உள்ளவர்கள் எல்லோருமே, என்றைக்கும் உயிருடன் இருக்க விரும்புவதுதான், இந்த உலகின் மிகப்பெரிய ஆச்சரியம் என்று, மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் (தர்மபுத்திரர்), யட்சனுடைய கேள்விக்குப் பதிலளிக்கும்போது கூறுகிறார். ஆகையால் நாம் வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, நற்செயல்களை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.

தாராள குணம் படைத்தவனுக்கு பணம் புல்லுக்குச் சமம். தைரியசாலிக்கு (சூரன்) மரணம் புல்லுக்குச் சமம். வெறுப்புற்றவனுக்கு மனைவி புல்லுக்குச் சமம். ஆசையற்றவனுக்கோ இந்த உலகமே புல்லுக்குச் சமம். 

நாம் எதை நினைக்கிறோமோ, அதைப் பேச வேண்டும். நாம் எதைப் பேசுகிறோமோ, அதன்படி செயலாற்ற வேண்டும்.

சிதைக்கும் சிந்தைக்கும் ஓரெழுத்து "ந்' மாத்திரமே வித்தியாசம். சிதையோ இறந்த உடலை எரிக்கும். சிந்தை (சிந்தா) என்கிற கவலை உயிருடன் உள்ள உடலையே எரிக்கும். (சிதை இறந்த உடலுக்கு மூட்டும் தீ)

தாழ்ந்தவர்கள் பணத்தை விரும்புகிறார்கள். நடுத்தர மக்கள் பணத்தையும் கெüரவத்தையும் (மானம்) விரும்புகிறார்கள். உயர்ந்தவர்களோ கெüரவத்தையே விரும்புகிறார்கள். கெüரவம் (மானம், மரியாதை) தான் பணத்தைவிட உயர்ந்தது.

சூரியன் உதிக்கும்போதும் காவி நிறத்தில் இருக்கிறது. சூரியன் மறையும்போதும் காவி நிறத்தில் இருக்கிறது. அதுபோன்று நல்ல மனிதர்கள், வசதிகள் (சம்பத்து) இருந்தபோதும், வசதிகள் இல்லாதபோதும், ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். அவர்கள் இன்ப துன்பங்களை ஒரே மாதிரியாக நினைக்கிறார்கள்.
- "சுபாஷிதம்' ஒரு சம்ஸ்கிருத சுலோகம்

இறைவனே! ஆற்றல் அனைத்தும் உடைய ஆண்டவனே; நான் உங்களுடைய நட்பை பெற்றேன். ஆதலால் நான் ஒன்றுக்கும் பயப்பட மாட்டேன்.
- ரிக் வேதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com