

ஸ்ரீ சாரதாதேவி! உங்களுக்கு விருப்பமான கர்மாக்களில் மிகவும் உறுதியான புத்தியையும், அதைச் செய்வதற்கு உரிய உடல் வலிமையையும், நீண்ட ஆயுளையும், மூவுலகிலும் பரவிய புகழையும், பாவ வழியில் வெறுப்பையும், சத்கதைகளைக் கேட்பதையும், எப்பொழுதும் கொடுக்கும் கருணைக்கடலான ஸ்ரீ சாரதாதேவி! நீங்கள் எங்களுக்கு நல்லறிவையும், தூய்மையான புத்தியையும் தந்து அருள் புரிய வேண்டும்.
- பக்தி சுதாதரங்கினி
பகவானே! நீங்கள் எல்லாவற்றிலும் குடிகொண்டிருக்கிறீர்கள். நீங்களே எல்லாமும்; எல்லா வடிவங்களும் உங்களுடைய வடிவம்தான். அனைத்தும் உங்களிடமிருந்து உண்டாகுகின்றன. நீங்கள் அனைத்துக்கும் ஆன்மா ஆகிறீர்கள். உங்களுக்கு எங்களின் வணக்கம். சர்வேசரே, எனது நெஞ்சில் உள்ள நினைவுகள் அனைத்தையும் அறிகின்ற உங்களிடம் நான் என்ன சொல்லப் போகிறேன்? நீங்களே அனைத்து உயிர்களுக்கும் ஆன்மாவாகவும், படைப்பு முழுவதற்கும் ஈசனாகவும்; அனைத்துப் பொருள்களுக்கும் ஆதியாகவும் இருக்கிறீர்கள். எல்லாம் ஆகிய நீங்கள் எங்கள் எல்லோருடைய ஆசைகளையும் அறிவீர்கள் அல்லவா?
- விஷ்ணு புராணம்
என் உடல் தூயதாகுக. பரஞ்சோதியாக என்னை உணர்வேனாக. என் மனம் தூயதாகுக. நான் அழுக்கும் பாவமும் நீங்கியவனாகுக. என் ஆன்மா தூயதாகுக.
- தைத்திரிய ஆரண்யகம்
தியானத்தின் மூலம் சிந்தையைத் தூய்மை செய்து கொள்பவன், துன்பக் கடலைக் கடக்கும் கப்பலாவான். மெளனமாகத் தியானம் செய்தால் மனம் கலங்கா நிலைபெறும்.
- மகாவீரர்
சிவபெருமானே! "நிலத்துக்குச் சொந்தக்காரன் வழி தவறி வந்து மேயும் மிருகம்' என்று என்னை அடித்து உங்களுடைய தூய்மையான நாமத்தைப் பாதிப்பதற்கு முன்னே, என்னைக் காப்பாற்றுங்கள்.
- பசவேசர் (வீர சைவம்)
புல்லைக் காட்டிலும் பணிவுள்ளவனாகவும், மரத்தைக் காட்டிலும் பொறுமை உடையவனாகவும், பிறரிடமிருந்து பெருமையை விரும்பாதவனாகவும், மாறாக எல்லோரையும் பெருமைப்படுத்துபவனாகவும் இருந்துகாண்டு சதாசர்வ காலமும் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்.
- கெளரங்கர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.